Author: Selvaraj Illavarasu

20 கோடி இந்திய வாடிக்கையாளர்களை இழந்தது டிக்டாக், பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு ரூ.45,000 கோடி நஷ்டம்

லாடாக் எல்லையில் நடந்த மோதலையடுத்து, டிக்டாக், ஷேர்சாட், உள்பட 59 சீனநாட்டு செயலிகளைத் தடை விதித்தது இந்திய அரசு. இதனால், டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் ரூ.45,000 கோடி அளவுக்கு நஷ்டத்தைச் சந்திக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 20 கோடி இந்தியர்கள் டிக்டாக்கை பயன்படுத்தி வந்தனர். இந்த கஸ்டமர்களையும் டிக் டாக் இழந்துள்ளது. இது தொடர்பாக குளோபல் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த மாதத்தில் […]

“மரகத சுரங்கத்தில் நிலச் சரிவு” 162 தொழிலாளர்கள் பரிதாப பலி – சோகத்தில் மூழ்கியது மியான்மர்

மியான்மர் நாட்டில் பச்சை மரகத கல்லை வெட்டி எடுக்கும் ஜாட் சுரங்கத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலியான தொழிலாளர்கள் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது, பலர் இடிபாடுகளில் சிக்கி இருந்ததால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் இருந்து வந்தது. கனமழை காரணமாக ஏற்கனவே குறித்த நிலப்பகுதி ஈரமாக இருந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மண் குவியல் குவியலாக தொழிலாளர்கள் மீது விழுந்து அமுக்கியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் […]

2,000 பேருக்கு புதிதாக பணி – பாரத ஸ்டேட் பேங்க் முடிவு

புதுடில்லி: இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி (SBI) கிராமப்புற கடன் திட்டங்கள் மற்றும் கடன் அட்டை பணிகள் உள்ளிட்டவைகளுக்காக புதிதாக 2000 பேரை பணியமர்த்த முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வங்கிகள் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் SBI வங்கி புதிதாக 2000 பேரை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. அடுத்த […]

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 18 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 7 லட்சத்து 93 ஆயிரத்து 417 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 43 லட்சத்து 45 ஆயிரத்து 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 968 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனாவில் இருந்து 59 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். […]

நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்களுக்குத் தடை: நிதின் கட்கரி

புதுடெல்லி: இந்தியாவில் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே கடந்த 15-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து, சீனாவின் அராஜகத்தைக் கண்டிக்கும் விதமாக சீனாவில் தயாராகும் செயலிகள் எதையும் பயன்படுத்தக்கூடாது. சீனப் பொருட்களை […]

சாத்தான்குளம் வழக்கில் இரண்டு காவலர்கள் கைது

சென்னை: சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர். 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் எஸ்.ஐ.யாக பணியாற்றிய ரகு […]

மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்றுக்கு 60 போலீசார் பலி

மும்பை:சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவின் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது. அங்கு ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது. கொரோனா வைரசின் தாக்கம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரையும் விட்டுவைக்கவில்லை.இந்நிலையில், மகாராஷ்டிராவில் அதிகாரிகள் உள்பட 60 போலீசார் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 77 போலீசாருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு […]

ஒரு மாதத்தில், அரசு பங்களாவை காலி செய்ய பிரியங்காவிற்கு மத்திய அரசு நோட்டீஸ்

புதுடில்லி: டில்லியில் உள்ள அரசு பங்களாவை வரும் ஆக.1ம் தேதிக்குள் காலி செய்யுமாறு, காங்கிரஸ் பொது செயலர் பிரியங்காவுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1997ம் ஆண்டு முதல் டில்லி வி.ஐ.பி., பகுதியில் உள்ள அரசு பங்களாவில் பிரியங்கா, தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். எஸ்.பி.ஜி பாதுகாப்பில் இருக்கும் தனிநபர் என்பதால் பிரியங்காவுக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்கான வாடகையாக 700 ரூபாயை அவர் செலுத்தி வந்தார். இந்நிலையில், கடந்தாண்டு சோனியா, […]

ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் மூலம் ஈரானில் இருந்து 687 தமிழக, கேரள மீனவர்கள் தூத்துக்குடி வந்தனர்

தூத்துக்குடி: ஈரானில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 687 மீனவர்களுடன் இந்திய கடற்படை கப்பல் ‘ஐஎன்எஸ் ஜலஸ்வா’ இன்று காலை தூத்துக்குடி வஉசி துறைமுகம் வந்து சேர்ந்தது. கப்பலில் வந்தவர்களை தமிழக செய்தி மற்றும் விளம்பத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். மருத்துவப் பரிசோதனை மற்றும் குடியுரிமை சோதனை முடிந்த பிறகு கப்பலில் வந்த […]

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்கள் ஐரோப்பிய வான் பரப்பில் பறக்க 6 மாதம் தடை விதித்தது ஐரோப்பிய யூனியன்

லாகூர்: பாகிஸ்தானில் பணி புரிந்து வரும் 860 விமானிகளில் 262 பேர் போலியான உரிமம் வைத்துள்ளனர் அல்லது விமானி தேர்வில் முறைகேடு செய்தவர்கள் என அந்நாட்டு விமானப்போக்குவரத்துத்துறை மந்திரி குலாம் சர்வார் கான் கடந்த வாரம் பாரளுமன்றத்தில் தெரிவித்தார்.  இதில் பாதிக்கும் அதிகமானோர் பாகிஸ்தானின் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் ஏர்லைன்சில் பணிபுரிபவர்கள் என அவர் தெரிவித்தார். இதையடுத்து பாகிஸ்தான் ஏர்லைன்சில் பணிபுரியும் 434 விமானிகளில் 141 உடனடியாக பணியில் இருந்து […]