Author: Selvaraj Illavarasu

அமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு

சீன நிறுவனத்தின் டிக்டாக், வீசாட் ஆகிய செல்போன் செயலிகள் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளதாார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் குறிப்பிட்டு தடை விதித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி சீனாவின் டிக்டாக், வீசாட், ஹலோ உள்ளிட்ட சுமார் 106 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்திருந்தது. இந்தியாவின் இந்த செயலை அமெரிக்கா பாராட்டியது. இந்நிலையில், டிக்டாக் உள்ளிட்ட சில சீன செயலிகளால் தேசப் […]

ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்

ராமர் கோவில் கட்டுமானத்திற்காக, குஜராத்தை சேர்ந்த, ஆன்மிக தலைவர், மொராரி பாபு, உலகம் முழுவதிலும் உள்ள தன் ஆதரவாளர்களிடம் இருந்து, 18.61 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளார். குஜராத்தை சேர்ந்தவர், மொராரி பாபு. ஆன்மிக தலைவரான இவர், தன், 14வது வயதில் இருந்து, ராமாயண சொற்பொழிவு ஆற்றி வருகிறார். இவருக்கு, உலகம் முழுதும், ஆதரவாளர்கள் உள்ளனர்.ராமஜென்ம பூமி விவகாரத்தில், ‘ராமர் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் சொந்தமானவரல்ல. அவர், […]

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சரும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான மனோஜ் சின்ஹா வியாழக்கிழமை நியமிக்கப்பட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் மாளிகை பத்திரிகையாளர் செயலாளர் அஜய் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் கிரீஷ்சந்திர முா்மு தனது பதவியை புதன்கிழமை இரவு ராஜிநாமா செய்தாா். அரது ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் […]

லடாக், வீரர்களுக்கு ராக்கி கட்டும் வடகிழக்கு மாநில சகோதரி

சகோதரத்துவத்தை போற்றும் வகையில் ஆண்டு தோறும் ரக்சாபந்தன் எனும் திருவிழா வடமாநிலங்களில் கொண்டாடப்படுகின்றது.இதை முன்னிட்டு நடந்த விழாவில் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் பணிபுரியும் வீரர்களுக்கு வடகிழக்கு மாநில சகோதரிகள் கயிறு அணிவித்தார் யூனியன் அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த விழாவை தொடங்கிவைத்தார்.அருணாச்சல்,மணிப்பூர்,மேகலயா,அஸ்ஸாம்,மிசோரம்,சிக்கிம் ,நாகலாந்து,திரிபுரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பெண்கள் ராக்கி,முக கவசம் ஆகியவற்றை வீரர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

ராமர் கோயில் பூமி பூஜைக்கான அழைப்பிதழ்: முஸ்லிம் வழக்கறிஞருக்கு முதல் அழைப்பு

ஆக.,05ல் நடைபெற உள்ள ராமர் கோயில் பூமி பூஜைக்கான அழைப்பிதழில் பிரதமர் மோடி உள்பட 5 பேர் மட்டுமே மேடையில் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும், முதல் அழைப்பை அயோத்தி வழக்கில் வாதாடிய முஸ்லிம் வழக்கறிஞர்களில் ஒருவரான இக்பால் அன்சாரிக்கு வழங்கப்பட்டுள்ளது. உ.பி மாநிலம் அயோத்தியில் ஆகஸ்ட் 5ம் தேதி, ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே பங்கேற்க […]

ஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி

பாகிஸ்தான் செய்தி தொலைக்காட்சி ஒன்று ஹேக் செய்யப்பட்டு அதில் இந்திய தேசிய கொடியுடன் சுதந்திர தின வாழ்த்துகள் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் செய்தி சேனலான டான், ஞாயிற்றுக்கிழமை ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. டான் செய்தி சேனலில் விளம்பரம் ஒன்று ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தபோது, இந்திய தேசியக் கொடி மீது ‘சுதந்திர தின வாழ்த்துகள்’ என்ற செய்தியுடன் தோன்றியது. அதைப் […]

பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் எண்ணிக்கை குறைப்பு, திருப்பி அனுப்பப்படும் 200 பேர்

பிரதமருக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்குவதால் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்பிஜி) வீரர்கள் எண்ணிக்கையை பாதியாக குறைக்கும் நடவடிக்கை தொடங்கியது. முதல்கட்டமாக, 200 வீரர்கள் பழைய படைப்பிரிவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். கடந்த 1984ல் பிரதமர் இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர்களின் பாதுகாப்புக்காக சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்பிஜி) கடந்த 1985ல் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிரதமர்களுக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு இருந்த நிலையில், முன்னாள் பிரதமர் ராஜிவ் […]

பஹ்ரைனில் மருத்துவர்களுக்கு கொரோனாவை பரப்ப முயன்றவருக்கு 3 ஆண்டு சிறை

பஹ்ரைனில் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தலாகவே உள்ளது. தொற்று பாதிப்புகளை குறைக்க பஹ்ரைன் அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டில் கொரோனா தொற்று பாதித்த நோயாளி ஒருவர், தனது முக கவசத்தை வேண்டுமென்றே கழற்றிவிட்டு, மருத்துவ ஊழியர்களுக்கு முன் இருமியதால் அவருக்கு விதிமீறலின் அடிப்படையில் அபராதத்துடன் (BD 1,000) 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரதுறை கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் தொற்று பரிசோதிக்கப்பட்ட […]

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை – 151 நதிகளில் தண்ணீர் எடுத்து அயோத்தி வந்த சகோதரர்கள்

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு 151 மேற்பட்ட நதிகளில் இருந்து வயதான சகோதரர்கள் இருவர் தண்ணீர் எடுத்து வந்துள்ளனர். 1968 முதல், 151 ஆறுகள், 8 பெரிய ஆறுகள், 3 கடல்களில் இருந்து தண்ணீரும், இலங்கையின் 16 இடங்களிலிருந்து மண்ணும் சேகரித்து வந்துள்ளோம் என்றும் சகோதரர் ராதே சியாம் பாண்டே என்பவர் தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை வரும் 5ம் தேதி நடக்க […]

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்!

டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சோனியா காந்தி, கடந்த 30-ம் தேதி  இரவு டெல்லியில் உள்ள சர் கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 30-ம் தேதி  டெல்லியின் சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று […]