கொரோனா பரவல் அதிகரிப்பு , ஆஸ்திரேலியாவில் 6 வார ஊரடங்கு

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலால் அங்கு 100 ஆண்டுகளுக்குப் பிறகு இரு மாகாணங்களுக்கு இடையேயான எல்லை மூடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளுக்கும் பரவியதைப் போலவே ஆஸ்திரேலியாவிலும் மிகவும் வேகமாகப் பரவியது. அங்கு பிறப்பிக்கப்பட்ட கடுமையான ஊரடங்கு மற்றும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக மே மாத இறுதியில் கொரோனா பரவல் 75% கட்டுக்குள் வந்தது. இதனால் கடந்த 10 நாள்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியா முழுவதும் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டு கட்டுப்பாடுகளுடன் மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதன் விளைவாகக் கடந்த சில நாள்களாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. மார்ச் மாதம் முதல் எப்போதும் இல்லாதவகையில் கடந்த திங்கள் கிழமை ஒரே நாளில் 191 பாசிடிவ் கேஸ்கள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகலாம் என அச்சம் கொண்ட அந்நாட்டு அரசு, அடுத்த 6 வாரங்களுக்கு மெல்போர்னில் கடுமையான ஊரடங்கு பிறபித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *