தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமனம்

பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அமுதா 1994 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர்.

இவர் தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். நேர்மையான அதிகாரியாக மக்களின் அன்பைப் பெற்றவர், அமுதா ஐ.ஏ.எஸ். தனது சிவில் சர்வீஸ் பணியில் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையராகப் பணியாற்றிவந்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மூவரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை விரைவாகவும் பொறுப்பாகவும் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *