குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பிரதமர்  நரேந்திர மோடி, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஜூலை 3 ம் தேதி பிரதமர்  நரேந்திர மோடி திடீரென லடாக் சென்று, வீரர்களுடன் சந்தித்து பேசினார். தொடர்ந்து எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆய்வு செய்தார்.

இந்நிலையில் இன்று  பிரதமர்  நரேந்திர மோடி, ஜனாதிபதி மாளிகை சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். அப்போது லடாக் விவகாரம் குறித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *