காபுல்: ஆப்கானிஸ்தானின் ஹெல்மெண்ட் மாகாணம் சங்கின் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பகுதியில் இன்று வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று திடீரென வெடித்துச்சிதறியது.இந்த குண்டுவெடிப்பு தாக்குதலைத்தொடர்ந்து ராக்கெட் தாக்குதலும் நடத்தப்பட்டது.

இந்த கொடூர தாக்குதலில் சந்தைப்பகுதியில் இருந்த அப்பாவி பொதுமக்கள் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர்.
சந்தைப்பகுதியில் இன்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலை தலிபான் பயங்கரவாதிகள் தான் நிகழ்த்தியுள்ளதாக் ஆப்கானிஸ்தான் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.