கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் திருமண நிகழ்ச்சிக்காக மதுரை சென்று வந்த, கோவை (தெற்கு) சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணனின் மகள், மருமகன், பேத்தி ஆகிய மூன்று பேருக்கும் கடந்த வாரம் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அம்மன் கே. அர்ச்சுணனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *