சினிமாவில் தோனியாக நடித்தவர் திடீர் தற்கொலை

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த, பாலிவுட்டின் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34), மும்பை, பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீஹார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த சுஷாந்த், பொறியல் படித்தவர். ஆரம்பத்தில் டான்சராக தனது சினிமா பயணத்தை துவக்கி, பின் டிவி தொடர்களில் நடித்தார். கை போ சே என்ற படத்தில் மூன்ற நாயகர்களில் ஒருவராக நடித்தவர் அமீர்கானின் பி.கே படத்திலும் நடித்தார். பின் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்.எஸ்.தோனியில், தோனியாகவே நடித்து புகழ்பெற்றார். தொடர்ந்து ராப்டா, கேதர்நாத் போன்ற படங்களில் நடித்தார்.

இவரது முன்னாளர் மேலாளர் திஷா ஷேலியன் என்பவர் கடந்த வாரம் தற்கொலை செய்தார். அப்போதிருந்தே சற்று அதிருப்தியிலும், தீவிர மன அழுத்தத்திலும் இருந்து வந்தார். இந்நிலையில் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *