நேபாளத்தில் கடும் வெள்ளம், நிலச்சரிவுக்கு 60 பேர் பலி, 41 பேர் மாயம்

நேபாளத்தில் கடந்த 4 நாட்களில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 60 பேர் பலியாகியுள்ளனர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 41 பேரைக் காணவில்லை.

கனமழையால், நேபாளத்தின் மேற்கே மியாக்தி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.  இதுவரை 27 பேர் பலியாகி உள்ளனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர்.  இதனால் அவர்களில் நூற்றுக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து உள்ளனர்.

நேபாளத்தில் பருவமழை காலங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படுவது வழக்கத்திற்குரிய ஒன்றாகி விட்டது.  கடந்த 12ந்தேதி வரை இதுபோன்று ஓராயிரம் பேர் வீடுகளை இழந்து அகதிகளாக முகாம்களில் தங்கியுள்ளனர்.  70 முதல் 80 பாதுகாப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *