ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரில் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கடந்த மாத இறுதியிலிருந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயல்வதும், இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பொது மக்களை தாக்குவதுமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு பக்கம் பாகிஸ்தான் ராணுவமும் அத்துமீறி குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு இந்திய தரப்பில் உடனுக்குடன் தக்க பதிலடி தரப்படுகிறது.
இந்நிலையில், தெற்கு காஷ்மீரின் சோபியான் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பயங்கரவாதிகளுடன் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் துப்பாக்கிச்சூடு தொடங்கியது. இதில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். வியாழனன்று இப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு 2 பயங்கரவாதிகள் இறந்தனர். சோபியானில் 5 பயங்கரவாதிகளும், புல்வாமாவில் 3 பேரும் கொல்லப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.