டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை! மத்திய அரசு அதிரடி

புதுடில்லி: லடாக் மோதலை தொடர்ந்து டிக்டாக், ஹலோ, ஷேர் இட், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன ‘ஆப்’களுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறி இந்திய ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதல் சம்பவத்தால், இந்தியா – சீனா இடையேயான உறவில் விரிசல் பெரிதாகியுள்ளது. இந்தியா – சீனா எல்லைப்பகுதியில் இன்னும் பதற்றமான சூழலே நிலவுகிறது. சீனாவின் அத்துமீறலையடுத்து இந்திய அரசு, சீனாவுடனான வர்த்தகம் மற்றும் ராணுவ ரீதியிலான உறவுகளில் சில சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதை குறைக்கவும், சீன முதலீடுகளுக்கு இந்தியாவில் கட்டுப்பாடு விதிக்கவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது மத்திய அரசு.

இந்திய மக்களும் தன்னெழுச்சியாக சீன பொருட்கள் மற்றும் சீன மொபைல் அப்ளிகேஷன்களை புறக்கணித்துவருகின்றனர். இந்நிலையில், சீன அப்ளிகேஷன்கள், அதை பயன்படுத்தும் இந்தியர்கள் குறித்த தகவல்களை பகிர்வதால், 59 சீன அப்ளிகேஷன்களுக்கு இந்தியாவில் தடை விதித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

59 அப்ளிகேஷன்களில், அதிகமான மக்களால் அதிகப்படியாக பயன்படுத்தப்படும் சில ஆப்களான டிக் டாக், ஷேர் இட், ஹெலோ, வீ சாட், யூசி பிரவுசர், யூசி நியூஸ் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.

One thought on “டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை! மத்திய அரசு அதிரடி”

  1. அரசு உத்தரவை அடுத்து இந்த செயலிகளை கீழிறக்கம் செய்ய இன்மேல் கூகுல் ப்ளே ஸ்டோர் இந்தியாவில் தடை செய்யும், அதுமட்டுமல்லாது இணைய நிறுவங்கள் இந்த செயலிகளிலிருந்து தகவல்கள் பறிமாற்றத்தையும் தடை செய்யும்.

Leave a Reply to ரமேஷ் குமார் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *