Month: August 2020

மீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்

ஆகஸ்டு 29/30 நடந்த சம்பவத்தால் ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையை உடனடியாக தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது இராணுவம்.இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த இராணுவம் தடைவிதித்துள்ளது.இராணுவம் மட்டுமே இந்த சாலையை உபயோகிக்கும். இரவில் இந்த பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு சீன வீரர்களின் நடமாட்டத்தை இந்திய வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.இவர்கள் இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்றுள்ளனர்.இதை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.அப்போது மோதல் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உனடியாக பிரச்சனை நடந்த பகுதிக்கு அதிக வீரர்களை இராணுவம் […]

வீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்

பாரமுல்லா மாவட்டத்தின் க்ரீரி பகுதியில் தற்போது நடைபெற்று வந்த என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் போட்டுத்தள்ளியுள்ளனர். ரோந்து சென்ற வீரர்கள் மீது இந்த பயங்கரவாதிகள் தாக்கியதில் இரு சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் ஒரு காஷ்மீர் காவல் துறை வீரர் வீரமரணம் அடைந்தனர். தாக்குதல் நடந்த பிறகு சிஆர்பிஎப்,இராணுவம் மற்றும் காஷ்மீர் காவல்துறை இணைந்த படைப்பிரிவு தேடுதல் வேட்டையை தொடங்கியது. பயங்கரவாதிகளை வெற்றிகரமாக கண்டடைந்த வீரர்கள் அதன் பிறகு நடைபெற்ற […]

பாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்

பாகிஸ்தானுடனான இந்திய வான் எல்லையை பாதுகாக்கும் பொறுப்பு இந்திய விமானப்படையின் மேற்கு கட்டளையகத்தின் பணி ஆகும். இந்திய விமானப்படை கட்டளையகங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் மிகப்பெரிய கட்டளையகங்களில் இது ஒன்றாகும். நேற்று இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ராகேஷ் குமார் பதவ்ரியா இந்த கட்டளையகத்தின் முக்கிய தளம் ஒன்றிற்கு தீடிர் விசிட் அடித்தார், அப்போது தயார்நிலை ஆகியவற்றை ஆய்வு செய்த அவர் மிக்21 போர் விமானத்திலும் […]

பிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உலகையே உலுக்கி வருகிறது. இந்தியாவும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். ‘பாரதி சேவா சங்கம்’ என்பது பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவ ஆர்.எஸ்.எஸ்., (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்) தொண்டர்களால் நடத்தப்படும் ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பு. நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனாவை கட்டுப்படுத்தவும் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் உதவவும் இந்த அமைப்பினர் தன்னார்வலர்களாக […]

சீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்

இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் 59% இந்தியர்கள் தற்போது நடக்கும் எல்லைப் பிரச்சனைக்காக சீனாவுடன் போர்புரிய வேண்டும் என பதிலளித்துள்ளனர். இந்திய சீனா எல்லை மோதல் தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தொடர்ந்து ஐந்து கட்டங்களாக கார்ப்ஸ் அளவிலான அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.கிட்டத்தட்ட 60% இந்தியர்கள் போருக்கு ஆதரவாக இருந்தாலும் 34% பேர் அதற்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.

அமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு

சீன நிறுவனத்தின் டிக்டாக், வீசாட் ஆகிய செல்போன் செயலிகள் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளதாார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் குறிப்பிட்டு தடை விதித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி சீனாவின் டிக்டாக், வீசாட், ஹலோ உள்ளிட்ட சுமார் 106 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்திருந்தது. இந்தியாவின் இந்த செயலை அமெரிக்கா பாராட்டியது. இந்நிலையில், டிக்டாக் உள்ளிட்ட சில சீன செயலிகளால் தேசப் […]

ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்

ராமர் கோவில் கட்டுமானத்திற்காக, குஜராத்தை சேர்ந்த, ஆன்மிக தலைவர், மொராரி பாபு, உலகம் முழுவதிலும் உள்ள தன் ஆதரவாளர்களிடம் இருந்து, 18.61 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளார். குஜராத்தை சேர்ந்தவர், மொராரி பாபு. ஆன்மிக தலைவரான இவர், தன், 14வது வயதில் இருந்து, ராமாயண சொற்பொழிவு ஆற்றி வருகிறார். இவருக்கு, உலகம் முழுதும், ஆதரவாளர்கள் உள்ளனர்.ராமஜென்ம பூமி விவகாரத்தில், ‘ராமர் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் சொந்தமானவரல்ல. அவர், […]

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சரும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான மனோஜ் சின்ஹா வியாழக்கிழமை நியமிக்கப்பட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் மாளிகை பத்திரிகையாளர் செயலாளர் அஜய் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் கிரீஷ்சந்திர முா்மு தனது பதவியை புதன்கிழமை இரவு ராஜிநாமா செய்தாா். அரது ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் […]

லடாக், வீரர்களுக்கு ராக்கி கட்டும் வடகிழக்கு மாநில சகோதரி

சகோதரத்துவத்தை போற்றும் வகையில் ஆண்டு தோறும் ரக்சாபந்தன் எனும் திருவிழா வடமாநிலங்களில் கொண்டாடப்படுகின்றது.இதை முன்னிட்டு நடந்த விழாவில் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் பணிபுரியும் வீரர்களுக்கு வடகிழக்கு மாநில சகோதரிகள் கயிறு அணிவித்தார் யூனியன் அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த விழாவை தொடங்கிவைத்தார்.அருணாச்சல்,மணிப்பூர்,மேகலயா,அஸ்ஸாம்,மிசோரம்,சிக்கிம் ,நாகலாந்து,திரிபுரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பெண்கள் ராக்கி,முக கவசம் ஆகியவற்றை வீரர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

ராமர் கோயில் பூமி பூஜைக்கான அழைப்பிதழ்: முஸ்லிம் வழக்கறிஞருக்கு முதல் அழைப்பு

ஆக.,05ல் நடைபெற உள்ள ராமர் கோயில் பூமி பூஜைக்கான அழைப்பிதழில் பிரதமர் மோடி உள்பட 5 பேர் மட்டுமே மேடையில் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும், முதல் அழைப்பை அயோத்தி வழக்கில் வாதாடிய முஸ்லிம் வழக்கறிஞர்களில் ஒருவரான இக்பால் அன்சாரிக்கு வழங்கப்பட்டுள்ளது. உ.பி மாநிலம் அயோத்தியில் ஆகஸ்ட் 5ம் தேதி, ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே பங்கேற்க […]