Month: July 2020

ராஜபாளையம், திமுக எம்.எல்.ஏ, தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே வருகிறது. இதில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ராஜபாளையம் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 15 நாட்களுக்கு முன், எம்.எல்.ஏ.,வின் […]

கொரோனா தடுப்பூசி – நவம்பர் மாதத்திற்குள் ஆயிரம் ரூபாய் விலையில் இந்தியாவில் கிடைக்கும்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் ஆயிரம் ரூபாய் விலையில் இந்தியாவில் கிடைக்கும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கொரோனா தடுப்பூசியை ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்த தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாகவும், மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு விட வழி […]

பாமகவில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்தில் பாமகவில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்தில் பாமக மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட செயலாளர், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் கல்லூர் கே. சி. வெங்கடாசலம் தலைமையில், பாஜக மாவட்ட தலைவர் தர்மலிங்கம் அவர்கள் முன்னிலையில் பாஜகவில் புதன்கிழமை இணைந்தனர், உடன் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கலைவாணன் வழக்குரைஞர் கேசவன், சென்னையன் […]

டெல்லியில் வீடு வீடாக சென்று ரேஷன் வழங்கப்படும் – முதலமைச்சர் கெஜ்ரிவால்

டெல்லியில் வீடு வீடாக ரேஷன் வழங்கப்படும். டெல்லி அமைச்சரவை முதலமைச்சர் “கர் கர் ரேஷன்” திட்டத்தை (வீட்டுக்கு வீடு ரேஷன்) அனுமதித்துள்ளது. வீடு வீடாக ரேஷன் திட்டத்தை அமல்படுத்தும்போது, ​​வீட்டிற்கு நேரடியாக ரேஷன் கொண்டு செல்லப்படும். அதாவது, டெல்லி மக்கள் இனி ரேஷன் கடைகளில் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. ரேஷன் திட்டத்தின் டோர்ஸ்டெப் டெலிவரி மூலம் டெல்லியில் வசிக்கும் சுமார் 72 லட்சம் மக்கள் ஒவ்வொரு மாதமும் பயனடைவார்கள். இவர்கள் […]

மகாராஷ்டிரா மாநிலத்தில் மார்ச் – மே மாதங்களில் மட்டும் 206 விவசாயிகள் தற்கொலை

மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி பகுதியை சேர்ந்த விவசாயிகள் சுமார் 206 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கொரோனா வைரசால் ஊரடங்கு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் பெரும்பாலான விவசாயிகள் மே மாதத்தில் தான் அதகளவில் தற்கெலை செய்து கொண்டுள்ளனர். அதே போல் அமரவாதி பகுதியை சேர்ந்த விவசாயிகள 2017-2019 ஆண்டுகளில் சுமார் 3,171 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சமூக ஆர்வலரான அபய் கோலர்கர் தாக்கல் செய்திருந்த தகவல்அறியும் […]

ஓமான் நாட்டில் கொரோனா தோற்று அதிகரிப்பால் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 8 வரை முழு ஊரடங்கு

ஓமனில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, ஜூலை 25 முதல் ஆக.,8 வரை முழு ஊரடங்கு பிறப்பித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஓமன் நாட்டில் இதுவரை 69 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 337 பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முழு ஊரடங்கு பிறப்பித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூலை 25 முதல் ஆக., 8 வரை முழு […]

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்ட ஸ்வப்னா – என்ஐஏ அறிக்கை

கேரள தங்கக் கடத்தில் வழக்கின் குற்றவாளிகளான ஸ்வப்னா உள்ளிட்டோர், நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்டுள்ளனர்; பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்துள்ளனர்’ என, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கேரளாவில் முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் பெயரை பயன்படுத்தி, தங்கம் கடத்தப்படுவது, சமீபத்தில் […]

பிளாஸ்மா தானம் செய்வதாக பணம் பறித்த மோசடி செய்த இளைஞர்

கொரோனா வைரஸ் தாக்கி அபாய கட்டத்தில் இருப்பவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது. அது போன்ற தேவையிருப்பவர்களை தொடர்பு கொண்டு பிளாஸ்மா தானம் செய்வதாக பணம் பெற்றுக்கொண்டு இளைஞர் ஒருவர் ஏமாற்றியுள்ளார். ஐதராபாத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் கொரோனா பிரச்னையை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு சிக்கியுள்ளார். இது போன்ற மோசடி முதல் முறையாக நடந்துள்ளது. கொரோனா வைரஸிலிருந்து மீண்ட நபர்களிடமிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தத்தை செலுத்துவது பிளாஸ்மா சிகிச்சை எனப்படுகிறது. […]

கருப்பர் கூட்டம் சேனலின் 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கம்

இந்துக்கடவுகளை இழிவுபடுத்தி வந்த ‘கருப்பர் கூட்டம்’ சேனலின் 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை இணைய தளத்தில் இருந்து  சைபர் கிரைம்  காவல்துறையினர் அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். கடவுள் முருகனுக்கு உகந்த கந்தசஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் என்ற சேனல் அமைப்பு. இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், கறுப்பர் கூட்டம் மீது ஏராளமான புகார்கள் பதியப்பட்டது. ஏற்கனவே இந்துமதத்தை இழிவுபடுத்தும் வகையில், பல்வேறு வீடியோக் […]

தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமனம்

பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அமுதா 1994 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர். இவர் தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். நேர்மையான அதிகாரியாக மக்களின் அன்பைப் பெற்றவர், அமுதா ஐ.ஏ.எஸ். தனது சிவில் சர்வீஸ் பணியில் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையராகப் பணியாற்றிவந்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, […]