Day: July 19, 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,979 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில், 4,979 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.  கடந்த சில வாரங்களாக தலைநகர் சென்னையில்  கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ளது. ஆனால், சென்னையை தவிர்த்து பிற  மாவட்டங்களில் தொற்றுக்கு ஆளாவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் […]

வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா

வேலூர் சட்டப் பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் கார்த்திகேயனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கார்த்திகேயன் வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் ஏற்கெனவே 14 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது கார்த்திகேயனையும் சேர்த்து 15 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொற்று […]

இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ள பாகிஸ்தானிடம் இருந்து பணம் பெற்ற பிரிட்டன் எம்.பி

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயணம் மேற்கொள்ளவும், இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ள பிரிட்டன் எம்.பி டெபி ஆப்ரகாம்ஸ், பாகிஸ்தான் அரசிடம் இருந்து பணம் பெற்றது அம்பலமாகியுள்ளது. மத்திய அரசு கடந்தாண்டு ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப்பிரிவை நீக்கி, மாநிலத்தை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதையடுத்து, பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் உள்ள தொழிலாளர் கட்சி […]