Day: July 18, 2020

திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கணேசனுக்கு கொரோனா தொற்று

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுஉள்ளார். தமிழகத்தில் கொரோனா நலப்பணிகளில் ஈடுபட்டு வந்த  அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பலருக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது.  முதன்முதலாக திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர்.

பாகிஸ்தான், தலிபான் அமைப்பின் தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை உலக பயங்கரவாதியாக ஐ.நா அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு பெரும் அடியாக, ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான தெஹ்ரிக்-இ தலிபானின் பாகிஸ்தான் தலைவர் முப்தி நூர் வாலி மெஹ்சுத்தை உலக பயங்கரவாதியாக அறிவித்தது. இதனையடுத்து அவர் வெளிநாடுகளுக்கு பயணிக்க முடியாது; அவரது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும். ஐ.நா-வின் பாதுகாப்பு கவுன்சில் ISIL மற்றும் அல்கொய்தா தடைகள் பட்டியலில் மெஹ்சுட்டைச் சேர்த்தது. அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு ஆதரவாகவும், சேர்ந்தும், செயல்பட்டு அவர்களுக்கு நிதியுதவி […]

ஒரு அங்குல நிலத்தை கூட, எந்த நாடும் தொட முடியாது – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

இந்தியா – சீனா இடையிலான எல்லை பிரச்னையில் பேச்சுவார்த்தையின் மூலம் எந்தளவுக்கு தீர்வு காணப்படும் என உத்தரவாதம் அளிக்க முடியாது. அதே நேரம், நாட்டின் ஒரு அங்குலத்தை கூட உலகின் எந்த சக்தியாலும் எடுத்து செல்ல முடியாது என உறுதியாக கூற முடியும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா – சீனா இடையிலான எல்லை பிரச்னையில், இரு தரப்பிலும் படைகளை விலக்கி கொள்வதற்கான பேச்சுவார்த்தை […]

ரக்ஷாபந்தன், 4000 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் சீனா.!

நாடு முழுவதும் சீன பொருள்களை புறக்கணிக்கும்  முயற்சிகள் தொடங்கிவிட்ட நிலையில், அதன் அடுத்தகட்டமாக இந்தியா ஒரு படி மேலே சென்றுவிட்டது. மேக்  இன் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே பொருட்களை தயாரித்து தன்னிறைவு பெற வேண்டும் என்ற இலக்கின் முதல் கட்டம் இப்போது நிறைவேறுகிறது.  இந்தியாவின் இந்த செயல்பாடு, ஒருபுறம் சீனாவுக்கு பொருளாதார ரீதியாக நட்டத்தை ஏற்படுத்தினால், மறுபுறம் நம் நாட்டில் லாக்டவுனால் வேலைவாய்ப்புகளை இழந்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும் வழங்குகிறது.  […]