Day: July 15, 2020

கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு கொரோனா தொற்று, மருத்துவமனையில் அனுமதி

கோவை மாவட்ட ஆட்சி தலைவர் கே. ராஜாமணிக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்திருப்பது, அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் உறுதியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா கடந்த ஜூன் மாதம் 2வது வாரத்திற்கு பின் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. ஆனால் ஜுலையில் இந்த வேகம் கடுமையாக அதிகரித்தது. சென்னை போன்ற பிற பகுதிகளில் இருந்து வந்தவர்களால் கோவையில் கொரோனா கடுமையாக அதிகரித்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சி தலைவர் ராஜாமணியே […]

கொரோனா பரிசோதனையில் மூக்கினுள் உடைந்து சிக்கிய குச்சியால் உயிரிழந்த குழந்தை

சவுதி அரேபியாவில் அப்துல்லா அசிஸ் அல் குபான் என்ற 18 மாத ஆண் குழந்தையை, தீவிர காய்ச்சல் காரணமாக அங்குள்ள ஷக்ரா பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதிக உடல் வெப்பநிலை காரணமாக குழந்தைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப் குச்சி, அதாவது மூக்கினுள் சளி மாதிரிகளை எடுக்கப் பயன்படும் குச்சியை குழந்தையின் மூக்கில் விடும்போது அது உடைந்துள்ளது. டாக்டர்கள் மயக்க மருந்து […]

முன்னாள் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஜா கட்சியிலிருந்து நீக்கம்

கட்சி விரோத நடவடிக்கைகள் மற்றும் ஒழுக்கத்தை மீறியதற்காக மூத்த தலைவர் முன்னாள் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ஜாவை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததற்காக ராஜஸ்தான் துணை முதல்வர் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட்டுக்காக அவர் ட்வீட் செய்த சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் அவரை இடைநீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு […]

சீனாவின் ஹூவாய் நிறுவன 5ஜி கருவிகளை பயன்படுத்த இங்கிலாந்து அரசு தடை

இங்கிலாந்து மொபைல் ஆப்ரேட்டர்கள் 2027ம் ஆண்டிற்குள் தங்கள் நெட்வொர்க்குகளிலிருந்து சீனாவின் ஹூவாய் நிறுவன 5ஜி கருவிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.  ஹூவாய் நிறுவனம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதே போல் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு அந்நிறுவனத்தின் 5ஜி கருவிகளை கொள்முதல் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை டிஜிட்டல் செயலாளர் ஆலிவர் […]

ராமர் குறித்த பிரதமரின் கருத்து அரசியல் சார்ந்தது இல்லை – நேபாள வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்

உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை. அது எங்கள் நாட்டில்தான் உள்ளது என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் கடவுள் ராமர் இந்திய நாட்டில் பிறந்தவர் அல்ல என்றும் நேபாள நாட்டில் பிறந்தவர் என்றும் அவர் ஒரு நேபாளி என்றும் நேபாள பிரதமர் தெரிவித்திருந்தார். அயோத்தி என்பது நேபாளத்தில் பிர்குஞ் பகுதிக்கு மேற்கில் இருக்கும் சிறிய கிராமம். அங்குதான் ராமர் பிறந்தார் என அவர் கூறினார். […]