Day: July 10, 2020

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு அமெரிக்காவும் தடை

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனம், அமெரிக்காவிற்கு விமானங்களை இயக்குவதற்கான அனுமதியை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. சர்வதேச விமான போக்குவரத்தில் ஐரோப்பிய யூனியன், பாகிஸ்தானிய விமான சேவையான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனத்தை சமீபத்தில் தடை விதித்தது. பாகிஸ்தான் விமான சேவையில் பணியாற்றும் விமானிகள், விமான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முறைகேடான வழியை பின்பற்றியதை பாகிஸ்தான் அரசு கண்டறிந்தது. இந்நிலையில் இந்த முடிவினை ஐரோப்பிய […]

தமிழக முதல்வர் K. பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கவுரவம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கௌரவப்படுத்தி உள்ளது அமெரிக்காவில் சிகாகோவில் இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் அமைப்பு “paul harries fellow” என முதல்வர் பழனிசாமியை அழைத்து கௌரவப்படுத்தியுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், “அமெரிக்காவில் சிகாகோவில் தலைமையகமாக இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் அமைப்பு, குடிநீர், சுகாதாரம், நோய்தடுப்பு, தாய் சேய் […]

வந்தே பாரத் திட்டம் மூலம் 5.80 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசு தகவல்

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை விமானம் மூலம் அழைத்து வர மத்திய அரசு வந்தே பாரத்  திட்டத்தை செயல்படுத்தியது. இதுவரை 3 கட்டத் திட்டங்கள் முடிந்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், தெற்காசிய நாடுகளில் இருந்த இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் இது தவிர கடல்மார்க்கமாக சமுத்திர சேது திட்டமும் செயல்படுத்தப்பட்டு இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் 3 கட்ட வந்தே […]

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது அமைச்சருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செல்லுர்ர் ராஜூ விரைவில் குணமடைய வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]

இந்திய டிவி சேனல்களுக்கு நேபாளத்தில் திடீர் தடை!

இந்திய அரசு சார் நிறுவனமான பிரசார் பாரதியின் டிடி சேனல் தவிர மற்ற அனைத்து செய்தி டிவி சேனல்களுக்கும் நேபாள அரசு தடை விதித்துள்ளது. அண்மைக் காலமாக நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் உறவு அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்திய பகுதிகளை இணைத்து நேபாளம் அண்மையில் புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டது! தங்களது நாட்டை ஒட்டிய இந்திய எல்லையில் இந்தியா சாலை அமைக்கக் கூடாது என இந்தியாவுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்தது நேபாளம். […]

கான்பூருக்கு அழைத்துச் செல்லும் வழியில் ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை

உத்தர பிரதேச ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டு மத்திய பிரதேசத்தில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது சாலை விபத்தில் அவர் சென்ற  கார் சிக்கியது. பின்னர் அங்கிருந்து அவர் தப்ப முயன்றபோது கொல்லப்பட்டதாக  போலீசார் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் ஒரு காவல்துறை உயர் அதிகாரி உட்பட 8 காவலர்களை கொன்ற விகாஸ் துபே பல இடங்களுக்கு தப்பி சென்றார். கான்பூரில் உள்ள தனது கிராமத்திலிருந்து ஹரியானாவின் ஃபரிதாபாத் வரை சென்றார், […]

சொத்து வரி வசூலை சென்னை மாநகராட்சி 6 மாதங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னையில் பணியாற்றிய பலரும் சொந்த ஊர் சென்றுள்ள நிலையில் சொத்து வரியை வருகிற 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிவித்திருப்பதைத் திரும்பப் பெற வேண்டும். சொத்து வரி வசூலை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் 31 ஆம் தேதிவரை ஊரடங்கு நீடிக்கின்ற நிலையில், “நிலுவையில் உள்ள மற்றும் இந்த ஆண்டிற்கான சொத்து வரியை உடனடியாக […]