Day: July 9, 2020

உத்தரப் பிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்ட ரவுடி விகாஸ் துபே கைது

உத்தரப் பிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் பிரபல ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் விகாஸ் துபேவை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக உத்தர பிரதேச போலீசார் எடுத்த நடவடிக்கையில் விகாஸ் துபே கூட்டாளிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். இன்று காலை ரவுடி விகாஸ் துபேவின் மற்றொரு கூட்டாளி பிரபாத் மிஸ்ரா என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீன அதிகாரிகளுக்கு பயணத் தடை விதித்து அமெரிக்கா அதிரடி

அமெரிக்கா அதிபர் டிரம்ப் நிர்வாகம் சீனாவுடனான தனது இராஜதந்திர போரில் புதிய நடவடிக்கையாக சீன அதிகாரிகள் மீது பயணத் தடைகளை விதித்து அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இது குறித்து மைக் பாம்பியோ தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “ திபெத்திற்கு செல்ல விடாமல் தடுக்கும் சீன நாட்டு அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை  விதித்து இன்று அறிவிப்பு வெளியிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “  சீனாவின் தன்னாட்சி பகுதியாக […]

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உட்பட 89 செயலிகளை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்க வீரர்களுக்கு இந்திய ராணுவம் உத்தரவு

பல தரப்பட்ட சைபர்வார் ஆபத்தைக் கருத்தில் கொண்டு 89 செயலிகளை தங்களது ஸ்மார்ட் போனிலிருந்து நீக்கிட வேண்டும் என ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ராணுவம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: சமூக வலைதளங்கள் மூலம் நாட்டின் பாதுகாப்பு தகவல்கள் திருட்டு நடைபெற வாய்ப்பு உள்ளதால் இந்திய ராணுவம், தடை செய்யப்பட்ட செயலிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், ட்ரூகாலர் வி சாட், ஹலோ சாட், ஷேர் […]