Day: July 8, 2020

கொரோனா பாதிப்பால் அமர்நாத் யாத்திரைக்கு தினமும் 500 பேருக்கு மட்டுமே அனுமதி!! யாத்திரை ஜூலை 21-ம் தேதி தொடக்கம்

கொரோனா பாதிப்பு காரணமாக அமர்நாத் புனித யாத்திரைக்கு நாள் ஒன்றுக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அவர்களும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  ஜூலை 21-ம்தேதி முதல்  அமர்நாத் யாத்திரை தொடங்கப்படவுள்ளது.  இதையொட்டி, நாடாளுமன்றத்தின் வடக்கு கட்டிட பகுதியில்  உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில்  அமர்நாத் யாத்திரைக்கு நாள் ஒன்றுக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற […]

காஷ்மீரில் பாஜக பிரமுகர் அவரது தந்தை மற்றும் சகோதரர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை

காஷ்மீரின் வடக்கு மாவட்டமான பந்திப்போராவைச் சேர்ந்த ஷேக் வாசிம் பாரி, இவர் பாஜக மாவட்ட தலைவராக இருந்தவர். இவரது சகோதரர் உமர் சுல்தான் , தந்தை பஷீர் அகமது ஷேக். இவர்கள் அப்பகுதியில் கடை வைத்துள்ளனர். சம்பவத்தன்று அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென கடைக்குள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் மூவரும் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கி மோசடி நீரவ் மோடியின் ரூ330கோடி சொத்துக்கள் பறிமுதல்

வெளிநாடு தப்பியோடிய மோசடி வைர வியாபாரியான நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.330 கோடி மதிப்பிலான சொத்துக்களை தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது உறவினர் மெஹுல் சோக்சியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பினர். ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நிரவ் […]

புராணங்களையும் சங்க இலக்கியங்களையும் மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி “புரிந்து கொண்ட சீனா”

சீனாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் எச்சரித்த பிரதமரின் ஸ்ரீ கிருஷ்ணர் என்னும் போர்க்குறியீடு..! “படைமாட்சி கூறும் வள்ளுவனும் பாரத போர் நடத்திய பகவான் கிருஷ்ணரும்” இந்தோ-சீன பிரச்சினையில் மோடி உணர்த்திய பாரதத்தின் போர் குறியீடுகள்.. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லையில் பதற்றம் ஏற்பட்ட உடனே தைவான் நாடு பாரதத்தின் இன்றைய ஆட்சியாளர்கள் யார் என்பதனை  தெளிவாக புரிந்து கொண்டு ட்ராகனை ராமபிரான் அம்பால் தாக்குவது போன்ற ஒரு படத்தை வெளியிட்டது.. இந்த […]

தங்கம் கடத்தல்: பினராயி விஜயன் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கடிதம்

கேரளாவில் தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கடிதம் எழுதியுள்ளார். கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானத்தில் வந்த பொருட்களை கடந்த 5-ந்தேதி சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரில் பார்சல் ஒன்று வந்திருந்தது. […]