Day: July 7, 2020

கொரோனா பரவல் அதிகரிப்பு , ஆஸ்திரேலியாவில் 6 வார ஊரடங்கு

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலால் அங்கு 100 ஆண்டுகளுக்குப் பிறகு இரு மாகாணங்களுக்கு இடையேயான எல்லை மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளுக்கும் பரவியதைப் போலவே ஆஸ்திரேலியாவிலும் மிகவும் வேகமாகப் பரவியது. அங்கு பிறப்பிக்கப்பட்ட கடுமையான ஊரடங்கு மற்றும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக மே மாத இறுதியில் கொரோனா பரவல் 75% கட்டுக்குள் வந்தது. இதனால் கடந்த 10 நாள்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியா முழுவதும் விதிக்கப்பட்டிருந்த […]

பாகிஸ்தான்: ஹிந்து கோவில் கட்டுமானத்திற்கு எதிராக வழக்கு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில், 10 கோடி ரூபாய் மதிப்பில் ஹிந்து கோவிலின் கட்டுமான பணிகளுக்கு சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு அங்கு எதிர்ப்பு எழுந்த போதும், கட்டுமான பணிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கோவில் கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி அமர் பரூக் முன்னிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த போது, பாகிஸ்தான் அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா காலித் மெக்மூத் கான் […]

75% தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே – ஹரியானாவில் புதிய சட்டம்

ஹரியானாவில் 75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே என்ற புதிய மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் நிறுவனத்தை தொடங்கும் பன்னாட்டு நிறுவனங்களில், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்குதான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நம் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் சட்டம் இருப்பதாக தெரியவில்லை. இதன் காரணமாக, சொந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் வேலைவாய்ப்பு பறிப்போவதாக பல்வேறு மாநிலங்களில் பரவலாக கண்டன குரல்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு […]

சீன அடக்குமுறைகளுக்கு எதிராக நீதி கேட்டு பன்னாட்டு நீதிமன்றத்தை அனுகிய உய்குர் முஸ்லிம்கள்

சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில் லட்சக்கணக்கான சிறுபான்மையின முஸ்லிம் வகுப்பினரான உய்குர் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். சீனாவின் தங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரானதான முதல் முறை முயற்சியாகும் இது. சீனாவில் சிறுபான்மையின முஸ்லிம் வகுப்பினரான உய்குர் முஸ்லிம்களை சீனர்களின் வாழ்க்கை முறைக்கு 5 ஆண்டுகளுக்குள் மாற்ற அந்நாடு திட்டமிட்டுள்ளது. சீன அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உய்குர் இன மக்கள் அங்குள்ள, வதை […]

இந்தையாவை பின்பற்றி டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகள் அமெரிக்காவிலும் தடை

அமெரிக்க மாநிலச் செயலாளர் மைக் பாம்பியோ விரைவில் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார். டிக் டாக் உடன் மேலும் சில சீன செயலிகளையும் தடை செய்யப் போவதாக அவர் கூறியுள்ளார். பாக்ஸ் நியூஸ் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தபோது அவர் இச்செய்தியை வெளியிட்டார். சீன ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகள் அமெரிக்கர்களின் தனிநபர் தகவல்களை நோட்டம் விடுவதாகவும் திருடுவதும் அமெரிக்க அரசு கருதுகிறது. சீன கம்யூனிச அரசு […]

இந்தியாவில் முதலீடு: சீன நிறுவனங்களின் 50 முதலீட்டு பரிந்துரைகளை மத்திய அரசு ஆய்வு

கடந்த மாதம், சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள், 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, சீனாவை சேர்ந்த, 59 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு, சீன நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதுகுறித்து, மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று […]

திபெத் ஆன்மீக தலைவர் தலாய் லாமாவை வரவேற்று சீனாவை சீண்டும் தைவான்!

சீனாவை கோபப்படுத்தும் வகையில் தலாய் லாமாவை தனது நாட்டிற்கு வருகை தர வேண்டும் என தைவான் வரவேற்றுள்ளது. தைவான் அதிபரின் இந்த நடவடிக்கையை சீனா சந்தேக கண் கொண்டு பார்க்கிறது.  தைவான் ஏற்கனவே சீன குடியரசு என்று அழைக்கப்படும் ஒரு சுதந்திர நாடு என்று தைவான் அதிபர் சாய் இங்-வென் கூறுகிறார். சீன குடியரசு என்பது தைவானின் அதிகாரப்பூர்வ பெயர் ஆகும். நாடுகடத்தப்பட்ட திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவின் […]

கான்பூர் என்கவுன்டர்: ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு

உத்தர பிரதேச மாநிலம், கான்பூர், ‘என்கவுன்டர்’ வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரவுடி கும்பலுடன் தொடர்புடைய, மேலும் மூன்று போலீசார் அதிரடியாக, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர். உ.பி.,யில் கான்பூர் அருகே, கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஷ் துபேயை பிடிக்கச் சென்ற போலீசார் மீது, ரவுடி கும்பல், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில், ஒரு டி.எஸ்.பி., மூன்று எஸ்.ஐ.,க்கள் உட்பட, எட்டு போலீசார் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஏழு போலீசார் […]