Day: July 6, 2020

கேரளாவில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் அபராதம் – 2 ஆண்டுகள் சிறை

கேரள மாநிலத்தில் கொரோனா பரவலையடுத்து ஓராண்டுக்கு பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ 10 ஆயிரம் மற்றும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்புதல் தடை செய்யப்பட்டுள்ளது, சமூக இடைவெளி கடைப்பிடித்தலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும் இறுதிச் சடங்குகளில் 20 பேரும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைகளில் […]

கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது

சாலை விபத்தில் முதியவர் பலியாக காரணமாக இருந்த இலங்கையின் குசால் மெண்டிஸ் கைது செய்யப்பட்டார். இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குசால் மெண்டிஸ் 25. இதுவரை 44 டெஸ்ட் (2,995 ரன்), 76 ஒருநாள் (2,167), 26 சர்வதேச ‘டுவென்டி–20’ (484) போட்டிகளில் விளையாடி உள்ள இவர், கொரோனா ஊரடங்கிற்கு பின் நடந்த தேசிய பயிற்சி முகாமில் பங்கேற்றார். கொழும்புவின் புறநகர் பகுதியான பனதுராவில் அதிகாலை 5 மணியளவில் […]

T20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.

ஆஸ்திரேலிய ஊடகங்களில் வரும் செய்திகளின் அடிப்படையில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்கவிருந்த T20 உலககோப்பைக் கிரிக்கெட் போட்டிகள், கொரோனா கொள்ளைநோய் பரவலின் காரணமாக தாமதமாகும். ஆஸ்திரேலிய பத்திரிக்கை இதுபற்றி எழுதும்போது கூடிய விரைவில் இந்த தள்ளிவைப்பு செய்தி வெளிவரும் என்று தெரிவித்திருக்கிறது.  கடந்த மாதம் உலக கிரிக்கெட் கவுன்சில் ஏற்கனவே T20 உலகக்கோப்பை போட்டிகளுக்கு தேதி எதுவும் குறிப்பிடாமல் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது. 

குவைத்திலிருந்து வெளியேற்றப்படும் 8 லட்சம் இந்தியர்கள்!

குவைத்தின் தேசிய சட்டமன்றத்தின் சட்டமன்றக் குழு 8 லட்சம் இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறக்கூடிய வரைவு வெளிநாட்டு ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவின்படி, குவைத்தில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கையானது மொத்த மக்கள் தொகையில் 15 சதவிகிதத்தினை தாண்டக்கூடாது என வரையறுத்துள்ளது. இதற்கான ஒரு விரிவான திட்டம் உருவாக்கப்படுகின்றது. இந்த மசோதாவின்படி அந்நாட்டில் உள்ள 8 லட்சம் இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படும். ஏனெனில் இந்திய […]

பஜாஜ் உற்பத்தி ஆலையில் 250 பேருக்கு கொரோனா, செயல்பாட்டை நிறுத்தச் சொல்லும் ஊழியர்கள்!

இந்தியாவன் மிகப் பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜின், மகாராஷ்டிராவில் உள்ள உற்பத்தில் ஆலையில் 250 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆலையின் செயல்பாட்டை நிறுத்துமாறு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் நாட்டில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவத் தொடங்கியபோது, இந்தியா லாக்டவுன் கட்டுப்பாடுகளை அறிவித்தது. மூன்று மாதங்களுக்குப் பின்னர் அந்தக் கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து […]

பிரண்ட்ஸ் ஆப் போலிஸ் எனும் பிரிவை தடைவிதிக்க வேண்டும் – சீமான்

சட்டத்திற்குப் புறம்பான ‘பிரண்ட்ஸ் ஆப் போலிஸ்’ எனும் பிரிவுக்கு தமிழக அரசு நிரந்தர தடைவிதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சீமான் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘சாத்தான்குளம் வணிகர்களது படுகொலைக்குப் பிறகு, தமிழகக் காவல்துறையினர் இதுநாள் வரை பயன்படுத்தி வந்த ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் பிரிவுக்குத் தடைவிதிக்க வேண்டும் எனும் கோரிக்கை நாடெங்கிலும் பெருவாரியாக எழுந்துள்ள நிலையில் அதற்கு திருச்சி, தூத்துக்குடி […]

அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் மக்கள் பிரதிநிதிகளும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்ட 4,150 பேரில் சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 66,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா. வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பா.வளர்மதி […]

சீனாவுடனான ரூ.900 கோடி வர்த்தக உறவை ரத்து செய்வதாக ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது

இந்திய சீன எல்லையான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணமடைந்தனர். சீனாவின் அத்துமீறலால் ஆத்திரமடைந்த இந்திய மக்கள், சீன தயாரிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும் சீன இறக்குமதியை படிப்படியாக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் முடிவுக்கு பல்வேறு நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றன. அந்த வகையில் சீனாவுடனான ரூ.900 […]

ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவில் ஊரடங்கு தளர்வுக்கு பின் வேகமாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

கடந்த மாதம் ஊரடங்கை முழுமையாக விலக்கிக் கொண்ட சவூதி அரேபியாவிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சவூதி அரேபியாவில் வைரஸ் தொற்று எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில்  50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாத மத்தியில் ஊடரங்கை பிறப்பித்த இந்த இரண்டு நாடுகளும் அவற்றை படிப்படியாக விலக்கி, முழுமையான வர்த்தக நடவடிக்கைகளை […]

தாஜ்மஹால் திறப்பு இல்லை: ஆக்ராவில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் நடவடிக்கை

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா சின்னமான தாஜ்மஹால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில், இன்று முதல் மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்களையும் திறக்க அனுமதிக்கப்பட்டு இருந்தது, ஆனால் ஆக்ராவில் நோய்த்தொற்று காரணமாக 71 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனால், தாஜ்மஹால், பதேபூர் சிக்ரி, ஆக்ரா கோட்டை உள்ளிட்ட […]