Day: July 5, 2020

அசாமில் ஊரடங்கு உத்தரவை மீறி மதபோதகர் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 10 ஆயிரம் பேர், மூன்று கிராமங்களுக்கு சீல்

அசாமில் ஊரடங்கு உத்தரவை மீறி மதபோதகரின் இறுதிச் சடங்கில் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து, மூன்று கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜூலை 31-ம் தேதி தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய ஜமாத் உல்மா அமைப்பின் துணைத் தலைவர் 87 வயதான கைருல் இஸ்லாம் கடந்த சில […]

வந்தே பாரத் திட்டம்- ஜூலை 11 முதல் 19 வரை அமெரிக்காவுக்கு 36 விமானங்கள் இயக்கம்

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தினால் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலமாக லட்சக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பல கட்டங்களாக ஒவ்வொரு நாடுகளுக்கு மிடையில் சிறப்பு விமானங்களை அரசு இயக்குகிறது. இதற்கிடையே, 4-வது கட்டமாக ஜூலை 3-ம் தேதியில் இருந்து ஜூலை 15-ம் […]

கர்நாடகா, மங்களூரு அருகே நிலச்சரிவில் சிக்கி இரண்டு சிறுவர்கள் பலி

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே குருபுரா பங்களகுடேயில் கடந்தசிலதினங்களாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று மதியம் நேரத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இச்சம்பவத்தில் வீடுகள் பலத்த சேதமடைந்தன. இதில் 10 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பலியாயினர். மற்றவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இதனயைடுத்து அமைச்சர் கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி மற்றும் நலின் குமார் கட்டீல் எம்.பி துணை ஆணையர் சிந்து பி.ரூபேஷ் உள்ளிட்டோர் மீட்பு நடவடிக்கை […]

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பிரதமர்  நரேந்திர மோடி, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். ஜூலை 3 ம் தேதி பிரதமர்  நரேந்திர மோடி திடீரென லடாக் சென்று, வீரர்களுடன் சந்தித்து பேசினார். தொடர்ந்து எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆய்வு செய்தார். இந்நிலையில் இன்று  பிரதமர்  நரேந்திர மோடி, ஜனாதிபதி மாளிகை சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். அப்போது […]

கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் திருமண நிகழ்ச்சிக்காக மதுரை சென்று வந்த, கோவை (தெற்கு) சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணனின் மகள், மருமகன், பேத்தி ஆகிய மூன்று பேருக்கும் கடந்த வாரம் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அம்மன் கே. அர்ச்சுணனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது […]

சீனா போர் பயிற்சி மேற்கொள்ளும் பகுதிக்கு விமானம் தாங்கி போர் கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா

  தென் சீன கடற்பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது. மேலும், அந்த கடற்பரப்பில் அமைந்துள்ள அண்டை நாடுகளான பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஜப்பான்,தைவான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவும் விளங்கிவருகிறது.        இதற்கிடையில், தென்சீன கடற்பரப்பில் அமைந்துள்ள பரசல் தீவுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் பகுதிகள் சர்வதேச கடல்பகுதியாகும்.  இதனால் […]

அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது – அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்காவின்  244-வது சுதந்திர தினம் நேற்று (சனிக்கிழமை) கொண்டாடப்பட்டது. அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அமெரிக்க மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “ 244- சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க மக்களுக்கும் அதிபர் டிரம்பிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டு இருந்தார். பிரதமர் மோடியின் டுவிட்டிற்கு பதிலளித்துள்ள அமெரிக்க அதிபர் […]

செயலிகளை உருவாக்க “தற்சார்பு புதுமை சவால்” என்ற பரிசுத்திட்டம், ரூ.20 லட்சம் வெல்ல வாய்ப்பு – தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கு பிரதமர் மோடி அழைப்பு

கொரோனா பரவலால் கொண்டு வரப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்காக, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையே பயன்படுத்த, மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. தற்சார்பு என்ற கோஷம், நாடு முழுதும் வேகமாக பரவியது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை துவக்கியுள்ள, ‘தற்சார்பு புதுமை சவால் இயக்கத்தில்’ இணைந்து, இதை தகவல் தொழில்நுட்பத் துறையினர் சவாலாக ஏற்க வேண்டும். இதன் மூலம், உள்நாட்டு தேவையை நிறைவேற்றுவதோடு, உலக நாடுகளுடன் […]