Day: July 4, 2020

ஜூம் செயலிக்கு பதிலாக களமிறங்கிய ஜியோ மீட்

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீடித்து வருகின்றது. இதனால், பல்வேறு நிறுவனங்களின் பணியாளர்கள், வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் வழியாக பாடங்களை பயிற்றுவிக்கின்றன. இதற்காக, Zoom, Google Hangout போன்ற தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றன. வாடிக்கையாளர்களின் தகவல் திருட்டு போன்ற பாதுகாப்பின்மை காரணமாக ஜூம் செயலியை பயன்படுத்த […]

அமெரிக்கா வாழ் இந்தியர்கள், திபெத்தியர்கள் மற்றும் தைவான் மக்கள் சீனாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

லடாக் எல்லையில் அத்துமீறும் சீனாவை கண்டித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.. நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அந்நாட்டில் வாழும் தைவான் மற்றும் திபெத் நாட்டை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்துவதாகவும், தங்கள் பலத்தை காட்டி அணைத்து நாடுகளையும் மிரட்டுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சீனா மீது குற்றம் சாட்டியுள்ளனர். போராட்டத்தின்போது சீனா உலகை அச்சுறுத்தும் புற்றுநோய் என்று தெரிவித்த அவர்கள், சீன […]

சீனா, பாகிஸ்தானிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய மாட்டோம் – மத்திய மந்திரி அறிவிப்பு

சீனாவுடன் எல்லைப் பிரச்னை நிலவி வரும் நிலையில், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மின் சாதனங்கள் இனி இறக்குமதிக்கு செய்யப்படாது என்று மத்திய மின்துறை அமைச்சா் ஆா்.கே.சிங் கூறினாா். இதுதொடா்பாக மாநில மின்துறை அமைச்சா்களுடன் வெள்ளிக்கிழமை காணொலி வழியில் ஆலோசனை மேற்கொண்ட பின்னா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மின் சாதன இறக்குமதிக்கு இனி அனுமதிக்கப்படமாட்டாது. எனவே, மாநில மின் விநியோக நிறுவனங்கள் சீன நிறுவனங்களிடமிருந்து […]

இந்தியாவுடனான பிரச்சினையால் நேபாள பிரதமருக்கு ஆளும் கட்சியில் கடும் எதிர்ப்பு

நேபாளம் சமீபகாலமாக இந்தியாவுடன் மோதல் போக்கையும், சீனாவுடன் நெருக்கத்தையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் எல்லைப் பகுதியான கலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளை தன்னுடைய நிலப்பகுதி எனக் கூறி அதை வரைப்படத்தில் சேர்த்து, அதை நாடாளுமன்றத்தில் திருத்தி தாக்கல் செய்து நிறைவேற்றியது.நேபாளத்தின் இந்த செயலை இந்தியா கடுமையாகக் கண்டித்தது. நேபாளத்தின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது, செயற்கையாக தனது நிலப்பகுதியை விரிவுபடுத்த நேபாளம் முயல்கிறது என்று மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்தது. […]

சீனாவை எதிர்த்து இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கும் ஜப்பான்

அமெரிக்காவைத் தொடர்ந்து தற்போது இந்தியாவிற்கு ஆதரவாக ஜப்பானும் களமிறங்கி யுள்ளது. சீனாவை எதிர்க்கும் வகையில் இந்தியா, – ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகள் கடற்படைப் பயிற்சியை மேற்கொண்டு இருக்கின்றன. இன்னும் பல்வேறு இராணுவ ரீதியான திட்டங்களை இரண்டு நாடுகளும் செயல்படுத்த உள்ளன. இந்தியா_ சீனா இடையே லடாக் எல்லையில் நிலவி வரும் மோதலில் இந்தியாவிற்கு ஆதரவாக பெரிய நாடுகள் களம் இறங்க உள்ளன. இந்திய எல்லையில் இருக்கும் நேபாளம், பாகிஸ்தான் […]

சீனாவுக்கு எதிராக சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்து சிறையில் அடைக்க வகை செய்யும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைச் சீனா நடைமுறைப்படுத்தியுள்ளது. இது ஹாங்காங்கின் தன்னாட்சியைப் பறிக்கும் செயலாகும் எனக் கூறி அமெரிக்காவும் பிரிட்டனும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஹாங்காங்கின் சுதந்திரத்தை பறிக்கும் சீனாவுக்கு நெருக்கடி தரும் வகையில், அமெரிக்க பார்லிமென்டில் முக்கியமான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவும் கண்டிக்கும் நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அதன் மீது தடைகள் விதிப்பதற்கு […]

ஐநா சபை தொடங்கி லடாக் வரை, தமிழை மேற்கோள் காட்டும் பிரதமர் மோடி ..

ஒரு மொழிக்கு பெருமை தருவதே அதனுடைய இலக்கண இலக்கிய காப்பியங்கள் தான். அவை இந்த உலகிற்கு எதை எடுத்து சொல்லி உள்ளது என்பதை ஆராய்ந்தாலே அந்த மொழி பேசும் இன மக்களின் மேன்மையை அறிந்து கொள்ள முடியும்! அந்த வகையில் இந்த உலகில் மூத்தகுடி தமிழர்கள் எனவும், அவர்களின் பண்டைய வாழ்வியல் உயர்ந்தது என்பதனையும் பாரதத்திற்கு மட்டுமல்லாமல் உலகிற்கு  மெய்பிக்கும் வகையில் பிரதமர் இக்கட்டான பல நேரங்களில் மேற்கோள் காட்டி […]

பத்து வருடங்களுக்கு பின்னர் அரசு பள்ளிகளில் கலைஞர் டிவி: திருச்சியில் பரபரப்பு!

தமிழகத்தில், 2006 – 11ல், கருணாநிதி முதல்வராக இருந்தபோது, பொது மக்கள் அனைவருக்கும் இலவச கலர் ‘டிவி’க்கள் வழங்கப்பட்டன. இந்த, ‘டிவி’க்கள் தரம் இல்லாமல், சில ஆண்டுகளில் பழுதடைந்தன. இலவச கலர், ‘டிவி’ வழங்கும் திட்டத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்படாமல், அந்தந்த மாவட்டங்களில் உள்ள குடோன்களில் பல ஆயிரம், ‘டிவி’க்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள குடோன்களில் பாதுகாக்கப்பட்ட, கலைஞர், ‘டிவி’க்கள், இரண்டு நாட்களாக, மாவட்டத்தில் […]