Day: July 3, 2020

ராணுவ மருத்துவனையில் சிகிச்சை பெறும் படைவீரர்களிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு, காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியானது. இதையடுத்து, இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், லடாக் பகுதியில் ராணுவ நிலைகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, முப்படைகளுக்கான தலைமை தளபதிமற்றும் […]

ராணுவத்தின் வீரத்தை பார்த்து 130 கோடி மக்கள் பெருமை – லடாக்கில் ராணுவத்தினருடன் பிரதமர் மோடி உற்சாக பேச்சு

ஜூன் மாத மத்தியில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே எல்லைப் பகுதியில் நடந்த மோதலின் பின்பு பிரதமர் நரேந்திர மோடி, இன்று திடீர் பயணமாக லடாக் சென்றார். அவருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே உடன் இருந்தனர். லடாக்கில் உள்ள நிம்மு பகுதியில் அவர் ராணுவத்தினருடன் உரையாற்றினார். பலகீனமாக உள்ளவர்களால் அமைதிக்கான முயற்சியை ஒருபோதும் தொடங்க முடியாது. உலகப் போரோ அல்லது அமைதியோ, […]

படங்களை மார்பிங் செய்து பெண்களை மிரட்டி பணம் பறிப்பு- 2 பேர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரின் பிரத்யேக செல்போன் 94899 19722 எண்ணில் தொடர்பு கொண்டு இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களின் படங்களை மார்பிங் செய்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டி வருகின்றனர். மேலும், அந்த பெண்களை மிரட்டி வீடியோ காலில் ஆபாசமாக வீடியோ பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும் என்று […]

தமிழகத்திற்கு, இலவசமாக 5.39 லட்சம் தனிநபர் பாதுகாப்பு கவசம் (பிபிஇ) மற்றும் 9.81 லட்சம் மாஸ்க்: மத்திய அரசு

புதுடில்லி: தமிழகத்திற்கு 5.39 லட்சம் பிபிஇ.,க்கள்,9.81 லட்சம் N95 மாஸ்க்குகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியுள்ளதாவது: கடந்த ஏப்., 1 முதல் 2.02 கோடி N95 மாஸ்க்குகள், 1.18 கோடி தனிநபர் பாதுகாப்பு கவசம்( பிபிஇ) ஆகியவை, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், 6.12 கோடி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை, மேட் […]

தியேட்டர்களை திறக்க கோரிக்கை

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 100 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தியேட்டர்கள் முக்கியப் பங்கு வகிப்பதால் தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், 100 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவதாகவும், சினிமா தொழிலில் 60 சதவீத வருவாயை தியேட்டர்கள்தான் தருகின்றன, அதனால் தியேட்டர்களைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என இந்திய மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

உபி, கான்பூரில் ரவுடிகளுடன் நடந்த மோதலில் 8 போலீசார் சுட்டுக்கொலை

கான்பூர்: உத்தர பிரதேச போலீசாரால் நீண்ட ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் முக்கிய ரவுடி விகாஸ் துபே. அவர் மீது 50க்கும் மேற்பட்ட கொலை, கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2001ம் ஆண்டில் உத்தர பிரதேச பாஜக பிரமுகரான சந்தோஷ் சுக்லாவை காவல் நிலையத்திலேயே வெட்டி கொன்ற வழக்கும் உள்ளது. அவரை பிடிக்க பல ஆண்டுகளாக உத்தர பிரதேச போலீஸார் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் விகாஸ் துபே மற்றும் கூட்டாளிகளுடன் […]

2020 இறுதிவரை டாக்டர், நர்சுகளுக்கு 25% விமான கட்டண சலுகை : இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு

டெல்லி : கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்கும் மிகப் பெரிய சேவையில், நாடு முழுதும் உள்ள டாக்டர்கள், நர்சுகள் ஈடுபட்டு வருகின்றனர். அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் இவர்களில் சிலருக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர், தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியில் முன்கள வீரர்களாக செயல்படும் டாக்டர் மற்றும் நர்சுகளை கவுரவிக்கும் விதமாக இந்தாண்டு இறுதிவரை மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 25% […]

ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

புதுடெல்லி: கடந்த சில தினங்களாக லடாக் எல்லை பகுதியில் இந்திய-சீன இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், ரஷியாவிடமிருந்து ரூ. 18,148 கோடிக்கு 33 புதிய போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதுபற்றி பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்ததாவது: “12 சுகோய்-30 எம்கேஐ மற்றும் 21 மிக்-29எஸ் என 33 புதிய போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் […]

அமெரிக்காவில் புதிய உச்சம்; ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா

வாஷிங்டன்: அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், உலகை அச்சுறுத்தி வருகின்றன. மருந்து கண்டுபிடிக்கப்படாத இந்த வைரசுக்கு உலகிலேயே அதிக பாதிப்புகளை சந்தித்த நாடாக அமெரிக்கா உள்ளது. இதன் காரணமாக டிரம்பின் கோபம் சீனா மீது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, […]

20 கோடி இந்திய வாடிக்கையாளர்களை இழந்தது டிக்டாக், பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு ரூ.45,000 கோடி நஷ்டம்

லாடாக் எல்லையில் நடந்த மோதலையடுத்து, டிக்டாக், ஷேர்சாட், உள்பட 59 சீனநாட்டு செயலிகளைத் தடை விதித்தது இந்திய அரசு. இதனால், டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் ரூ.45,000 கோடி அளவுக்கு நஷ்டத்தைச் சந்திக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 20 கோடி இந்தியர்கள் டிக்டாக்கை பயன்படுத்தி வந்தனர். இந்த கஸ்டமர்களையும் டிக் டாக் இழந்துள்ளது. இது தொடர்பாக குளோபல் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த மாதத்தில் […]