Day: July 1, 2020

டிக்டோக் தடைக்குப் பிறகு சீன ஆதரவு தலைவர்களை கலாய்த்த நெட்டிசன்கள்

டிக்டோக் உட்பட்ட் 59 சீன செயலிகளை மத்திய அரசு தடைசெய்து உத்தரவிட்டது. அதன் பிறகு இந்த செயலிகள் இந்திய மண்ணில் இணையம் வழி எந்த செய்தியையும், தகவலையைம் எடுத்துச் செல்லமுடியாதபடி இணைய நிறுவனங்கள் தடைசெய்தன. இருந்தாலும் பல சீன ஆதரவு கட்சிகள், தலைவர்கள் இதனால் மனமுடையந்திருப்பது பல செய்திகள் வழி வெளிவந்துள்ளது. இதனை கலாய்த்து டிவிட்டரில் பல நெட்டிசன்கள் டிவிட் செய்திருந்தார்கள். டிக் டாக் தடையை தொடர்ந்து நலிவடைந்த டிக் […]

மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்றுக்கு 60 போலீசார் பலி

மும்பை:சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவின் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது. அங்கு ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது. கொரோனா வைரசின் தாக்கம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரையும் விட்டுவைக்கவில்லை.இந்நிலையில், மகாராஷ்டிராவில் அதிகாரிகள் உள்பட 60 போலீசார் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 77 போலீசாருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு […]

ஒரு மாதத்தில், அரசு பங்களாவை காலி செய்ய பிரியங்காவிற்கு மத்திய அரசு நோட்டீஸ்

புதுடில்லி: டில்லியில் உள்ள அரசு பங்களாவை வரும் ஆக.1ம் தேதிக்குள் காலி செய்யுமாறு, காங்கிரஸ் பொது செயலர் பிரியங்காவுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1997ம் ஆண்டு முதல் டில்லி வி.ஐ.பி., பகுதியில் உள்ள அரசு பங்களாவில் பிரியங்கா, தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். எஸ்.பி.ஜி பாதுகாப்பில் இருக்கும் தனிநபர் என்பதால் பிரியங்காவுக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்கான வாடகையாக 700 ரூபாயை அவர் செலுத்தி வந்தார். இந்நிலையில், கடந்தாண்டு சோனியா, […]

ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் மூலம் ஈரானில் இருந்து 687 தமிழக, கேரள மீனவர்கள் தூத்துக்குடி வந்தனர்

தூத்துக்குடி: ஈரானில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 687 மீனவர்களுடன் இந்திய கடற்படை கப்பல் ‘ஐஎன்எஸ் ஜலஸ்வா’ இன்று காலை தூத்துக்குடி வஉசி துறைமுகம் வந்து சேர்ந்தது. கப்பலில் வந்தவர்களை தமிழக செய்தி மற்றும் விளம்பத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். மருத்துவப் பரிசோதனை மற்றும் குடியுரிமை சோதனை முடிந்த பிறகு கப்பலில் வந்த […]

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்கள் ஐரோப்பிய வான் பரப்பில் பறக்க 6 மாதம் தடை விதித்தது ஐரோப்பிய யூனியன்

லாகூர்: பாகிஸ்தானில் பணி புரிந்து வரும் 860 விமானிகளில் 262 பேர் போலியான உரிமம் வைத்துள்ளனர் அல்லது விமானி தேர்வில் முறைகேடு செய்தவர்கள் என அந்நாட்டு விமானப்போக்குவரத்துத்துறை மந்திரி குலாம் சர்வார் கான் கடந்த வாரம் பாரளுமன்றத்தில் தெரிவித்தார்.  இதில் பாதிக்கும் அதிகமானோர் பாகிஸ்தானின் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் ஏர்லைன்சில் பணிபுரிபவர்கள் என அவர் தெரிவித்தார். இதையடுத்து பாகிஸ்தான் ஏர்லைன்சில் பணிபுரியும் 434 விமானிகளில் 141 உடனடியாக பணியில் இருந்து […]

சென்னையில் கொரோனா பாதிப்பிற்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பலி: அதிர்ச்சி தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் கொரோனா கட்டுக்குள் வந்தபாடில்லை.  கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களில் ஒருவராக இருக்கும் காவல்துறையினரும் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,  கொரோனா பாதிப்பு காரணமாக  சென்னை காவல் துறையில் இரண்டாவது காவலர் பலியாகியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி […]

ஈரான்: மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து – 19 பேர் பலி

டெஹ்ரான்: ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானுக்கு அருகில் தைரிஷ் சதுர்க்கம் என்ற பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள ஒரு மருத்துவமனையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் டாங்கில் ஏற்பட்ட கவு காரணமாக இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வெடி விபத்து காரணமாக மருத்துவமனை முழுவதும் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இந்த கோர சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் […]

வெளிநாட்டினருக்கு பிறந்தவருக்கு தேசப்பற்று இருக்காது: பாஜக எம்.பி.பிரக்யா தாகூர் கருத்து

போபால்: கல்வான் மோதலில் 20 இந்திய வீரர்கள் மரணமடைந்த விவகாரம் தொடர்பாக பாஜக – காங்கிரஸ் இடையே கடும் வார்த்தைப்போர் நடைபெற்று வருகிறது. சீனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்து விட்டார் என்று ராகுல் காந்தியும், காங்கிரஸ்தான் 43,000 சதுர கி.மீ நிலத்தை சீனாவிடம் தாரைவார்த்து விட்டது என்று பாஜகவும் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தேசத்திற்கு எதிரானவர்கள் என்று பாஜக தலைவர்கள் சாடி வருகின்றனர். இந்நிலையில் பாஜக […]

டிக்டாக், ஷேர்இட், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு தடை – சீனா கவலை

புதுடில்லி : நாட்டின் பாதுகாப்பு கருதி, ‘டிக்டாக், ஷேர்இட், ஹலோ’ உள்ளிட்ட, சீன நிறுவனங்களின், 59 மொபைல்போன், ‘ஆப்’களுக்கு மத்திய அரசு விதித்த தடையால், சீனா கலக்கம் அடைந்துள்ளது. ‘சர்வதேச முதலீட்டாளர்களின் உரிமையை பாதுகாக்கும் பொறுப்பு, இந்தியாவுக்கு உள்ளது’ என, சீன அரசு தெரிவித்துள்ளது. மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலியுறுத்தியதுடன், இந்தத் தடை இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் […]