Month: June 2020

சீன பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் ; மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்

புதுடில்லி : சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதை விடுத்து அதை புறக்கணிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார். லடாக் எல்லையில் இந்தியா – சீனா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. திடீரென லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சீன வீரர்கள் இந்திய படைகளின் மீது கற்கள் மற்றும் ஆயுதங்களால் தாக்கினர். இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். […]

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்ததாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தகவல் கொடுத்தார். இதனைத்தொடந்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் பொய் என தெரியவந்தது. இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மிரட்டல் […]

டில்லியில் ஒவ்வொருவருக்கும் பரிசோதனை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிரடி முடிவு

புதுடில்லி : ‘டில்லியில் உள்ள ஒவ்வொருவருக்கும், கொரோனா பரிசோதனை செய்வோம்’ என, உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை, சென்னை நகரங்களுக்கு அடுத்தபடியாக, தலைநகர் டில்லியில், கொரோனா வைரஸ் பரவல், அதி தீவிரமாக உள்ளது. குறிப்பாக, அரசில் உயர் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கும், தொற்று ஏற்பட்டு கொண்டிருப்பதால், அதிரடி நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டுமென்ற நிலை, உருவாகிஉள்ளது. இதையடுத்து, மத்திய அரசு, நேரிடையாக […]

உ.பி., 10.4 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிதியுதவி ; முதல்வர் யோகி ஆதித்யநாத்

லக்னோ : கொரோனாவால் வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிதியுதவி வழங்கப்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. ஊரடங்கால் வேலையின்றி சிக்கி தவித்த எண்ணற்ற தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, உத்தரபிரதேசத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு குறித்து அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். […]

தமிழக அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி முதியவர் பலி!

திருச்சி: திருச்சி அருகே அமைச்சரின் பாதுகாப்புக்காக சென்ற போலீஸ் வாகனம் மோதி முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழக காதி மற்றும் கதர்கிராமத் தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் தனது சொந்த ஊரான சிவகங்கையில் இருந்து சென்னை சென்றுகொண்டிருந்தார். அவருக்கு பாதுகாப்பு கொடுத்து வரும் போலீசார் வாகனம், பஞ்சப்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு […]

சென்னை உள்பட 4 மாவட்டத்தில் 12 நாள் முழு ஊரடங்கு

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்குப் பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு: ”தமிழக அரசு, கரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு […]

மாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி

டேராடூன் : பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால், 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உத்தரகண்ட் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகின்றன. மாஸ்க், சமூக விலகலை கடைபிடிக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன. உத்தரகண்டில் இன்று(ஜூன் 14) 31 பேருக்கு கொரோனா […]

சென்னையில் கொரோனா உறுதியான 277 பேர் மாயம்

சென்னை: சென்னையில் கொரோனா உறுதியான 277 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை சைபர் கிரைம் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 30,444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த மே 23 முதல் ஜூன் 11 வரை கொரோனா உறுதியான 277 பேர் மாயமாகியுள்ளனர். தவறான மொபைல் எண், முகவரி அளித்து […]

சினிமாவில் தோனியாக நடித்தவர் திடீர் தற்கொலை

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த, பாலிவுட்டின் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34), மும்பை, பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீஹார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த சுஷாந்த், பொறியல் படித்தவர். ஆரம்பத்தில் டான்சராக தனது சினிமா பயணத்தை துவக்கி, பின் டிவி தொடர்களில் நடித்தார். கை போ சே என்ற படத்தில் மூன்ற நாயகர்களில் ஒருவராக […]

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பழனி. அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா உள்ளது உறுதியானது. இதனையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பழனி நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.