Day: June 27, 2020

ஆப்கானிஸ்தான், கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் மனித உரிமைகள் அமைப்பினர் 2 பேர் பலி

காபுல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் காபுல் நகரில் மனித உரிமைகள் அமைப்பை சேர்ந்த இரண்டு பேர் பயணம் செய்த காரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.  காரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் அதில் பயணம் செய்த மனித உரிமைகள் அமைப்பினர் இரண்டு பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனாலும், ஊழியர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு மனித […]

திமுக எம்.எல்.ஏ., ஆர்.டி. அரசுவுக்கு கொரோனா தொற்று

சென்னை: தமிகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கக்கூடிய நிலையில், செய்யூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ ஆர்.டி. அரசுவுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தி.மு.க. கட்சியின் 3வது எம்.எல்.ஏ ஆவார், ஏற்கனவே தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன் உயிரிழந்த நிலையில், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல். ஏவான வசந்தம் கார்த்திகேயன் சிகிச்சை பெற்று வந்தார். […]

ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டாக மாற்ற மத்திய அரசு ரூ.620 கோடி ஒதுக்கீடு

புதுடில்லி : ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டாக மாற்றுவதற்கு, மத்திய அரசு, 620 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், ஒவ்வொரு பெட்டிக்கும், தலா, இரண்டு லட்சம் ரூபாய் செலவிடப்படுவதாகவும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டாக மாற்றும் நடவடிக்கை ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளது.மருத்துவமனைகள் இல்லாத இடங்களில் இந்த ரயில் பெட்டிகள் உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த முயற்சியானது […]

இந்தியாவில், கடந்த 6 நாளில் 4 லட்சத்திலிருந்து 5 லட்சமாக கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 509,446 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,276 புதிய கேஸ்கள் இந்தியாவில் பதிவாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிக வேகம் எடுத்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக 15,689 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 381 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து 295,917 பேர் குணமடைந்து உள்ளனர். […]

போலீஸ் காவலில் உயிரிழந்த தந்தை – மகன் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி; ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் ஊரடங்கில் கடையைத் திறந்து வைத்திருந்ததால் போலீசாரால் தாக்கப்பட்டு, விசாரணைக்காகக் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதால் தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் இச்சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது கொலை வழக்கு போட வேண்டும் என்றும் அவர்கள் […]