Day: June 25, 2020

பான் அட்டை, ஆதார் அட்டை இணைப்புக்கான கால அவகாசம் மார்ச் 31, 2021வரை நீட்டிப்பு

  டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தினை குறைப்பதை நோக்கமாக கொண்டு பல வாரங்களாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அது கைகொடுக்காத நிலையில் தற்போது மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அரசின் பல நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. இதற்கிடையில் நிரந்தர கணக்கு எண் (PAN) அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான […]

ஆந்திர பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 477 பேருக்கு கொரோனா

ஆந்திரபிரதேச மாநிலத்தில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 477 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை தொடர்ந்து அதிகப்படுத்திக் கொண்டே செல்கிறது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. தற்போது ஆந்திர மாநிலத்தில் நோய் பாதிப்பு 10,884. மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 19,085 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. அதில் 477 பேருக்கு கொரோனா தொற்று […]

நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட நாளில் காங்கிரஸின் போலி ஜனநாயக் கொள்கையை விமர்சித்த அமித்ஷா

45 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் காங்கிரஸ் அரசால் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் என்ற ஒரு கோட்பாடே இல்லை எனவும் கட்சி மற்றும் தேசிய நலனை விட நேரு-காந்தி குடும்பத்தின் நலன் தான் அக்கட்சிக்கு முக்கியமானதாக இருந்தது எனவும் விமர்சித்துள்ளார். இந்த மோசமான நிலை, 45 ஆண்டுகளை கடந்தும் கூட, இன்றும் காங்கிரஸ் கட்சியில் […]

ராமநாதபுரம்: விமானப்படை வீரர்கள் 35 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள ஐஎன்எஸ் பருந்து விமானப்படை தளத்தில் 41 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனையில் 35 வீரர்களுக்கு தொற்று இருப்பது தற்போது வரை கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில்  கொரோனா வைரஸ்பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 67,468 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 866 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 35 வீரர்கள் உள்பட 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

முதல் முறையாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ரூ.10 கோடி செலவில் இந்து கோயில்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ரூ.10 கோடியில் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் கட்டப்படுகிறது. இக்கோயில் கட்டுமானத்திற்கு ரூ.10 கோடி செலவாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. நேற்று (புதன்கிழமை) இஸ்லாமாபாத்தின் எச்-9 பகுதியில் 20,000 சதுர யார்டுகளில் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் பாகிஸ்தான் நாடாளுமன்ற செயலாளர் லால் சந்த் மல்ஹி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய மல்ஹி, ‘‘கடந்த 1947-ம் ஆண்டுக்கு முன் இஸ்லாமாபாத்திலும் […]

இன்று முதல், 30ம் தேதி வரை, மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தடை , E-பாஸ் பெற வேண்டியது கட்டாயம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், ’தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும், நிலையில், முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், நாளை முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையேயான மண்டல போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. மாவட்டத்திற்குள் மட்டுமே […]

ஒரு கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு, அசத்தும் யோகி ஆதித்யநாத் அரசு!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜூன் 26 ஆம் தேதி ஒரு கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..! உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜூன் 26 ஆம் தேதி ஒரு கோடி மக்களுக்கு பயனளிக்கும் வேலைவாய்ப்பை அறிவிக்கவுள்ளார். இதன் மூலம் ஒரே நேரத்தில் ஒரு கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முதல் மாநிலமாக உத்தரபிரதேசம் மாறும். மற்றும் ஊரடங்கு காலத்தில் மாநிலத்திற்கு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இதன் மூலம் அதிக […]

துபாயில் இந்திய தம்பதியை கத்தியால் குத்தி கொன்ற பாக்,திருடன் கைது

துபாய் : துபாய் நகரின் அரேபியன் ரேஞ்சஸ் பகுதியில் வசித்து வந்தவர்கள் ஹிரேன் ஆதித்யா-விதி ஆதித்யா தம்பதி. இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச்சேர்ந்த இவர்கள் சார்ஜாவில் வர்த்தகம் செய்து வருகின்றனர். இந்த தம்பதியருக்கு 13 வயது ஒரு மகளும், 18 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 18 ம் தேதி இரவு பாகிஸ்தானை சேர்ந்த நபர், வீட்டிற்குள் திருட நுழைந்துள்ளார். சத்தம் கேட்டு எழுந்த ஹிரன் மற்றும் வித்தி, ஒருவர் […]