Day: June 23, 2020

இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி இல்லை, விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திரும்ப கொடுக்கப்படும்: அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

புதுடெல்லி: இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித பயணம் அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், மக்கா மற்றும் மதினா நகருக்கு வருகை தருவார்கள். ஆனால், தற்போது கொரோனா பரவல் அச்சம் இருப்பதால் ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு மக்காவுக்கு ஹஜ் பயணத்தில் […]

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுகொல்லப்பட்டனர்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், 2 பயங்கரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டனர். சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பண்ட்ஸூ என்னுமிடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று (ஜூன் 23) அதிகாலை, சி.ஆர்.பி.எப் 182வது பட்டாலியனை சேர்ந்த வீரர்கள், போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதி, பாதுகாப்பு படையினர் மீது […]

சீன எல்லையில் 32 சாலை திட்டங்களை விரைவுபடுத்த மத்திய அரசு முடிவு

புதுடில்லி: இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையிலான தொடர்ச்சியான மோதல்களுக்கு மத்தியில், சீன – இந்திய எல்லையில் நடந்து வரும் சாலை திட்டங்களை மத்திய அரசு ஆய்வு செய்ததுடன், அவற்றில் 32 பணிகளை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உள்துறை அமைச்சகம் கூட்டிய உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் மத்திய பொதுப்பணித் துறை, எல்லை சாலைகள் அமைப்பு மற்றும் இந்தோ – திபெத்திய எல்லைக் காவல்துறை இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக […]

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது

பிரேசில்: உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி உள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் 641 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து இங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 50,617 ஆக உள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஆபாச வீடியோ அனுப்பிய ஆசிரியர் கைது

ராமநாதபுரம் மாவட்டம், போலீஸ் குறை தீர்க்கும் மைய வாட்ஸ்-ஆப்  எண்ணுக்கு, ஒரு வாலிபரின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பார்வர்டு செய்யப்பட்டு இருந்தது. அப்பிரிவில் பணியாற்றிவரும் முதல்நிலைக்காவலர் கண்ணன் என்பவர் அந்த போட்டோக்களை பார்த்ததும் அதிர்ச்சியடைந்துள்ளார். ஆண்கள் சிலர் நிர்வாணமாக இருப்பது, பாலியல் உறவு கொள்வது ஆகிய வீடியோக்களை அடையாளம் தெரியாத ஒருவருடைய செல்போன் எண்ணிலிருந்து வந்திருந்தது. போலீசாரின் செல்போன் எண்ணுக்கே தைரியமாக ஆபாச போட்டோ, வீடியோக்களை அனுப்பியது யார்? […]

மதுரை : பாஜக பிரமுகர் வீட்டிற்கு சென்று தாக்க முயன்ற திமுக எம்.எல்.ஏ மூர்த்தி

மதுரை: மதுரை பாஜக இளைஞர் அணி நிர்வாகி வீட்டிற்கு திமுக எம். எல். ஏ மூர்த்தி சென்று தாக்க முயன்றதாக சி சி டிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மதுரை பாஜக இளைஞர் அணி கோட்ட பொறுப்பாளர் சங்கரபாண்டி ஊமச்சிகுளத்தில் வசிக்கிறார். அவரது வீட்டிற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற மதுரை கிழக்கு சட்டமன்ற திமுக எம். எல். ஏ. மூர்த்தி, தன்னைப்பற்றி சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களையும், ஊழல் செய்துள்ளதாக […]