Day: June 22, 2020

சீனாவுடனான ரூ.5,000 கோடி மதிப்பிலான திட்டங்களை நிறுத்தி வைத்தது மகாராஷ்டிரா அரசு

கல்வான் மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததையடுத்து, சீன தயாரிப்புகளை புறக்கணிப்போம் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிர அரசு சீன நிறுவனங்களுடன் கையெழுத்திட்ட ரூ.5000 கோடி மதிப்பிலான மூன்று ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பால் சரிவை சந்தித்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க ‘மேக்னடிக் மகாராஷ்டிரா 2.0 என்ற பெயரில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் சிங்கப்பூர், சீனா, […]

எந்த ஆயுதமும் வாங்கலாம். பாதுகாப்புத் துறைக்கு அவசரக்கால நிதியாக ரூ.500 கோடி ஒதுக்கீடு

 புதுடில்லி: சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்கு அடுத்துப் பாதுகாப்புத் துறைக்கு அவசரக்கால நிதியாக ரூ.500 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.  பாதுகாப்புப் படையினரின் ஆயுத அமைப்பை விரிவுபடுத்தும் முயற்சியில், வெடிமருந்துகளையும் ஆயுதங்களையும் வாங்குவதற்கு அதிகாரம் அளிக்கும் கொள்முதல் திட்டத்திற்கு ரூ.500 கோடி வரை சிறப்பு நிதி அதிகாரங்களை அரசாங்கம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறுகிய கால அறிவிப்பில் ஆயுதங்கள் மற்றும் ராணுவ பொருட்களை வாங்குவதற்கும், எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு […]

மகேந்திரகிரி, இஸ்ரோ ஊழியருக்கு கொரோனா: இஸ்ரோ மையம் மூடல்

நெல்லை: நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளிகள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவு வெளியாகியுள்ளது. அதில் நிரந்தர ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் நாகர்கோயில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்புடைய 50 க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். […]

கொரோனா நோயாளிகளுக்காக 19 மாடி கட்டிடத்தை வழங்கிய கட்டுமான தொழில் அதிபர்!

மும்பை : மும்பையைச் சேர்ந்த பில்டர் ஒருவர் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையத்திற்காக கட்டி முடிக்கப்பட்டு குடிபுக தயார் நிலையில் உள்ள புத்தம் புதிய 19 மாடி கட்டிடத்தை மும்பை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் கொரோனா வைரஸின் பிடியில் சிக்கி திணறி வருகிறது. மாநிலத்தின் பலி எண்ணிக்கை தற்போது 6 ஆயிரத்தை கடந்துள்ளது. 1.3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மும்பை மாநகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. […]

பணத்தை திருப்பி தராததால் பெண்ணை கடத்திய சம்பவம்: அமமுக நிர்வாகி கைது!

கமுதி: ராமநாதபுரம் மாவட்ட அ.ம.மு.க., தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் போஸ் செல்வா 31. இவர் கமுதி பஸ் ஸ்டாண்டில் டீக்கடை நடத்தி வருகிறார்.இவருக்கு கமுதி வடமலை மகன் சூர்யாவிடம் 25, பழக்கம் ஏற்பட்டுள்ளது. சூர்யா ரயில்வேயில் உணவகம், டூவீலர் நிறுத்துமிட குத்தகை வாங்கி தருவதாக கூறி போஸ் செல்வாவிடம் 32 லட்ச ரூபாய் பெற்று உள்ளார். சூர்யா எந்த கான்ட்ராக்ட்டும் பெற்று தராததால், போஸ்செல்வா பணத்தை […]

திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா

தமிகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கக்கூடிய நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. கடலூரில் நடந்த உறவினர் திருமண விழாவில் பங்கேற்று வந்த அவருக்கும், அவரது குடும்பத்தில் 3 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. அவர் முழுநலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வரவேண்டும் […]