சென்னை: ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பழனி. அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா உள்ளது உறுதியானது. இதனையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பழனி நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.