Year: 2020

கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலுக்கு தடை; பாஜக புகார்

இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டு வரும் கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:நாத்திக கருத்துகளை பரப்புவது போல சிலர் கருப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் நடத்தி வருகின்றனர். அதில், ஆபாச புராணம் என்ற பெயரில் கந்தசஷ்டி கவசத்தை […]

தமிழகத்தில் நேரடி முதலீடு செய்ய முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு: முதல்வா் எடப்பாடி பழனிசாமி கடிதம்

தமிழகத்தில் முதலீடு செய்ய பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட சில முன்னணி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து முதல்வா் பழனிசாமி கடிதம். இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:- உலகெங்கும் உள்ள முதலீட்டாளா்களை தமிழகத்தில் தொழில் தொடங்க ஈா்ப்பதற்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதலீடுகளை எளிதாக ஈர்ப்பதற்காக, நாடுகளுக்கான சிறப்பு அமைவுகளை உருவாக்குதல், வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு […]

சீனாவுடன் ஒப்பந்தம் போட உலக நாடுகள் மறுப்பு, இந்திய ஆலைகளுக்கு பெரிய வாய்ப்பு – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சீனாவுடன் ஒப்பந்தம் போட உலக நாடுகள் மறுத்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களை முன்னிட்டு டிக்டாக், ஹெலோ உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.  இதனை கவனித்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அவற்றுக்கு தடை விதிப்பது பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் […]

நேபாளத்தில் கடும் வெள்ளம், நிலச்சரிவுக்கு 60 பேர் பலி, 41 பேர் மாயம்

நேபாளத்தில் கடந்த 4 நாட்களில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 60 பேர் பலியாகியுள்ளனர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 41 பேரைக் காணவில்லை. கனமழையால், நேபாளத்தின் மேற்கே மியாக்தி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.  இதுவரை 27 பேர் பலியாகி உள்ளனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர்.  இதனால் அவர்களில் நூற்றுக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து உள்ளனர். நேபாளத்தில் பருவமழை காலங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படுவது வழக்கத்திற்குரிய ஒன்றாகி […]

கேரள தங்கக்கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது திடுக்கிடும் தகவல்

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கடந்த 5-ந்தேதி கைப்பற்றினர். இந்த கடத்தல் தொடர்பாக தூதரக முன்னாள் ஊழியர் சரித் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இந்த கடத்தலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் என்ற, மாநில தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) துறை முன்னாள் ஊழியர் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் […]

காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதியுமான், மத்திய பிரதேச முதல்வர் முன்னிலையில் பாஜக வில் இணைந்தார்

மத்திய பிரதேசத்தின் சதர்பூர் மாவட்டம், படா மலஹாரா சட்டமன்ற தொகுதியில் இருந்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.எல்.ஏவாக தேர்வானவர் பிரதியுமான் சிங் லோதி. இவர் நேற்று முன்தினம் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பொறுப்பையும் ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆளுங்கட்சியான, பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில் நேற்று அக்கட்சியில் […]

“சுதந்திர போராட்ட வீரன் அழகுமுத்துகோன் குருபூஜையும் வாக்குவங்கி அரசியலும்”

கொரோனா வந்தாலும் யாதவ சமுதாயத்தை திருப்திபடுத்திய “திராவிட கட்சிகள்”.!அரசியல் விமர்சகனாய் எனது பார்வை… // இந்தா ரெண்டு சீட்டு “எடுத்துக்கோ” என்ற பிச்சை  இம்முறை யாதவர்களிடம் எடுபடாது. தேசிய அளவில் வழுவாக உள்ள யாதவர்களை தமிழகம் மட்டும் புறக்கணிப்பதா..? என கொந்தளிக்கும் யாதவ இளைஞர் கூட்டமைப்பு. திரைமறைவில் ஆலோசிக்கும் யாதவ இளைஞர்கள்.கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் புறக்கணிக்கபட்ட சமுதாயமாக  இருந்த யாதவ சமுதாயத்தை நோக்கி ஒரு “வாக்கு வங்கி” அரசியலை தமிழக […]

கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் சீனாவில் இரண்டாம் கட்ட அவசரகால நிலை அறிவிப்பு

சீனாவின் நீர்வள அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமையன்று வெள்ளக் கட்டுப்பாட்டுக்கான அவசரகால நிலையை இரண்டாம் நிலைக்கு உயர்த்தி அறிவித்திருக்கிறது. அவசர நிலை இரண்டாம் கட்டத்திற்கு செல்வது மிகவும் அபாயமான நிலையை  குறிக்கிறது.  பருவமழைக் காலத்தில் கனமழையால் ஏற்கனவே வெள்ளச் சேதங்களை சந்திருக்கும் சீனாவில் தற்போது வெள்ள எச்சரிக்கை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஜூலை 4 முதல் , நாடு முழுவதும் 212 ஆறுகளில் அபாய அளவை […]

ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யாவுக்கு கொரோனா பாதிப்பு

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அதன் பிறகு அமிதாபின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு அவரும் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமிதாப், அபிஷேக் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்த பிறகு அவர்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் […]

துப்பாக்கியால் சுட்ட வழக்கில் திருப்போரூர் தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது

செங்கல்பட்டு மாவட்டம் செங்காடு பகுதியில் எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும், இமயம் குமார் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. செங்காடு கிராமத்தில் உள்ள சங்கோதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னையை சேர்ந்தவர்களுக்கு இமயம்குமார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த நிலத்துக்கு செல்ல அருகில் உள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்ததாக தெரிகிறது. இதற்கு எம்.எல்.ஏ. தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று  மாலை […]