பாரமுல்லா மாவட்டத்தின் க்ரீரி பகுதியில் தற்போது நடைபெற்று வந்த என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் போட்டுத்தள்ளியுள்ளனர்.
ரோந்து சென்ற வீரர்கள் மீது இந்த பயங்கரவாதிகள் தாக்கியதில் இரு சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் ஒரு காஷ்மீர் காவல் துறை வீரர் வீரமரணம் அடைந்தனர்.
தாக்குதல் நடந்த பிறகு சிஆர்பிஎப்,இராணுவம் மற்றும் காஷ்மீர் காவல்துறை இணைந்த படைப்பிரிவு தேடுதல் வேட்டையை தொடங்கியது. பயங்கரவாதிகளை வெற்றிகரமாக கண்டடைந்த வீரர்கள் அதன் பிறகு நடைபெற்ற என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ளனர்.