தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக லண்டனில் 14 வயது சிறுவன் கைது

லண்டனில் தீவிரவாத தாக்குதல் ஒன்றை நடத்த தயாராகி வந்த வெறும் 14 வயதுடைய சிறுவனை, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அதிரடியாக கைதுசெய்துள்ளார்கள். இங்கிலாந்து  ஹம்பர்ஷியர் மாகாணத்தில் உள்ள ஈஸ்ட்லி என்னும் இடத்தில் சிறுவன் கைதாகியுள்ளார். இஸ்லாமிய தீவிரவாதிகளோடு வீட்டில் இருந்தபடி தொடர்பில் இருந்த இந்த சிறுவன், லண்டனில் பாரிய தாக்குதல் ஒன்றை நடத்த திட்டம் தீட்டி இருந்துள்ளான்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 12) இவரை போலீசார் கைது செய்த போதும் இரு தினத்திற்கு முன்னரே இந்த தகவலை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். பிரித்தானிய பயங்கரவாத சட்டம் 41ன் கீழ்  சிறுவனை கைது செய்துள்ளதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *