பாகிஸ்தான் பங்குச் சந்தையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு :10 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தான், கராச்சியில் உள்ள பங்குச் சந்தை கட்டிடத்தை தாக்க முயன்ற 4 துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள்களை பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில், 4 பாதுகாப்பு வீரர்கள், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் உள்பட 10 இறந்தனர். மேலும், இந்த சம்பவத்தில் 3 போலீசார் காயமடைந்துள்ளனர் என்று பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் தி டான் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் கொல்லப்பட்ட துப்பாக்கிதாரிகளிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடி பொருட்கள் மற்றும் இதழ்கள் ஆகியவற்றைக் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தீவிரவாதிகள் கைவரிசையா என்பதை உறுதி செய்யும் விதமாக எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *